Thursday 5 November 2009

"ஐக்கிய தேசிய முன்னணி"யில் இணைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை முடிவு

"ஐக்கிய தேசிய முன்னணி" என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு உதயம்
2009-11-04 06:58:41
"ஐக்கிய தேசிய முன்னணி" என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டமைப்பு நேற்று உதயமாகியது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜன நாயக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா சுகந்திரக்கட்சி மக்கள் பிரிவு ஆகிய கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இணைந்து நேற்று புதிய அணியை உருவாக்கியிருக்கின்றன.
இந்தப் புதிய அணியில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கிடையே நேற்று நாடாளுமன்றத்தில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத் திடப்பட்டது. இதன் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றில் இந்தக்கூட்டணி ஆளும் தரப்பிற்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வகிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முற்பகல் 11.30 மணிக்கு சுப முகூர்த்தத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் எதிர்கட்சிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
Source: Yal Uthayan
========
ஐக்கிய தேசிய முன்னணியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையுமா?:நாளை முடிவு
வீரகேசரி இணையம் 11/4/2009 12:06:51 PM
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச கட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முன்னணி அணி திரண்டுள்ளது. இதில் ததேகூ இணைவது குறித்த முடிவு நாளை தெரியவரும் என அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இந்தப் புதிய கூட்டு முன்னணியில் இணைவது என தமிழ்த் தேசிய கட்சியின் சார்பில் கொள்கையளவில் முடிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை கொழும்பில் கூடி, இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்த முக்கியஸ்தர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்ற வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகின்ற போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முதன்மைப்படுத்துவதாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் எந்த வகையில், என்ன வகையான முடிவோடு இணைந்து செயற்படுவது என்பது குறித்து நாளைய கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...