Wednesday 3 January 2024

47வது சென்னைப் புத்தக விழா! விற்பனையில் ஈழ நூல்!!

Chennai Book Fair: சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்.
ஆயிரம் அரங்குகள்,பல்லாயிரம் நூல்கள். ஈழ நூல் விற்பனைக்கு. 

                                                                                                                            

றிவார்வம் உள்ளோரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை புத்தக கண்காட்சி இன்று 03-01-2024 தொடங்குகிறது. 

எழுத்தாளர்களின் படைப்புகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இங்கு  அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போல புத்தகங்கள் கிடைக்கும். கண்காட்சி தொடர்பான அறிவிப்பு வந்தாலே புத்தக பிரியர்கள் ஆனந்தக் கூத்தாடுவார்கள். 

ஒவ்வொரு ஆண்டும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (The Book Sellers and Publishers Association of South India (BAPASI)) சார்பில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.  அதன்படி இவ்வாண்டு 47வது புத்தக கண்காட்சி  இன்று  03-01-2024 சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.(Y.M.C.A) மைதானத்தில் தொடங்குகிறது. 

மாலை 4.30 மணிக்கு இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் புத்தக வாசிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான படைப்புகளை எளிதாக பெறுவதற்கு வசதியாக இருக்கும். சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியானது வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கண்காட்சி நடைபெறும் இடத்தில் தினமும் மாலையில் எழுத்தாளர்களுடனான உரையாடல், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறும். ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறும்.

அதேசமயம்  புத்தகங்கள் வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது நெட்வொர்க் பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்களும், பிஎஸ்என்எல் வைஃபை சேவையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மூலம் வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு புத்தக கண்காட்சியை 50 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


2-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி: 2024 ஜன.16 - 18 வரை நடைபெறும்

தமிழக அரசு சார்பில் முதலாவது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த ஜனவரி மாதம் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் தேதியை அறிவிக்கும் நிகழ்ச்சி கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: எழுத்தாளர்களின் படைப்புகள், இலக்கியங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

உலகத்தில் இருக்கின்ற எந்த மொழியாக இருந்தாலும், அம்மொழியில் உள்ள நல்ல எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளை நாம் கொண்டாடும் விதமாகவும், அந்த படைப்புகளை தமிழ் மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாகவும் சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்துகிறோம்.

2023-ம் ஆண்டு சர்வதேச புத்தகக் கண்காட்சியை குறுகிய காலகட்டத்தில் நடத்தினோம். அப்போது 24 நாடுகளில் இருந்து 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றை நடைமுறைப்படுத்த மொழிபெயர்ப்பு மானியமாக ஏறத்தாழ ரூ.3 கோடியை தமிழக அரசு வழங்க இருக்கிறது. கருணாநிதி நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு மானியம் வழங்குவதை பெருமையாகக் கருதுகிறோம்.

2024-ம் ஆண்டு சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜன. 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்படும். அதிகமான அரங்குகளை அமைக்கப்படும். புத்தகக் கண்காட்சியில் மதிப்புறு விருந்தினராக மலேசியா நாட்டை அழைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விற்பனையில் ஈழ மற்றும் கழக நூல்கள்:


No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...