அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Monday, 9 April 2018

மன்னாரில் சவூதி உதவியில் ஜும்மா பள்ளிவாசல்

மன்னாரில் ஜும்மா பள்ளிவாசலுக்கு அடிக்கல்

மன்னார் காட்டாஸ்பத்திரிப் பகுதியில் ஜும்மா பள்ளிவாசல் அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.

கைத்­தொ­ழில் மற்­றும் வர்த்­தக அமைச்­ச­ரும் அகில இலங்கை மக்­கள் காங்கிரசின் தேசிய தலை­வ­ரு­மான ரிசாத் பதி­யு­தீன் வாக்­கு­று­திக்கு அமைய சவூதி நாட்­டின் நிதி உத­வி­யு­டன் ஜும்மா பள்­ளிக்­கான அடிக்­கல் நடப்­பட்­டது.

காட்­டாஸ்­பத்­திரி ஜும்மா பள்ளி நிர்­வா­கத் தலை­வர் அப்­துர் ரஹீம் அவர்­க­ளின் வழி நடத்­த­லில், முன்­னாள் வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரும், அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான ரிப்­கான் பதி­யு­தீன் தலை­மை­யில் குறித்த நிகழ்வு இடம்­பெற்­றது.

நிகழ்­வில் ஒ.எச்.ஆர்.டி நிறு­வ­னத் தலை­வர் சஹாப்­தீன், மன்­னார் பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள், நிதி உத­விய சவூதி நாட்­டின் பிர­தி­நி­தி­கள், பள்ளி நிர்­வா­கத்­தி­னர், தேசிய இளை­ஞர் சேவை­கள் மன்­றத்­தின் வன்னி மாகாண பணிப்­பா­ளர் என்.எம்.முனவ்­பர் மற்­றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உதயன் Apr 9, 2018

No comments:

Post a Comment