Sunday 15 April 2018

மைத்திரி லண்டன் பயணம்-மோடியைச் சந்திப்பார்!


மைத்திரி லண்டன் பயணம்-மோடியைச் சந்திப்பார்!
15 Apr, 2018 | 1:10 PM

COLOMBO (News 1st) – பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியாவுக்கு பயணமானார்.

இந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20 ஆந் திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.

பொதுவான எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி, சர்வதேச நாடுகளின் தலைவர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார்.

மேலும் பிரித்தானியாவில் வாழும் இலங்கை பிரஜைகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஜனாதிபதி பிரித்தானியாவில் தங்கியிருப்பார் எனவும் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்.

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்!  பேரா.எஸ்.இசட்.ஜெய்சிங் ஜனவரி 2, 2020 தீக்கதிர் 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்...