அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Sunday, 5 March 2017

மாவைக்கு மைத்திரி மீது நம்பிக்கை- ஈனம்!


மைத்திரி மீது நம்பிக்கையீனம் அதிகரிக்கிறது:
மீண்டும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி நிற்கின்றோம்.
மாவை

உங்கள் மீதான நம்பிக்கையீனம் அதிகரித்துச் செல்கின்றது. உங்களைத் தெரிவு செய்த மக்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகின்றது. உங்களை கனத்த இதயத்துடன் - மனத்துடனேயே வரவேற்க வேண்டியுள்ளது என்றும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்பாக மாவை.சேனாதிராசா குறிப்பிட்டார்.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

உங்களை எங்கள் மக்கள் நம்பிக்கையோடு தெரிவு செய்தார்கள். ஆனால் எங்கள் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறவில்லை. மக்கள் போராடுகின்றார்கள். அவர்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. நம்பிக்கையீனம் வளர்ந்து வருகின்றது. அரசியல் பொறுப்புள்ளவர்கள் என்ற வகையில், எங்களுடைய மக்கள் நம்பிக்கை குறைந்து வருவதை உணர்ந்து கொண்டாலும், எங்கள் மக்கள் தெரிவு செய்த அரச தலைவரை, மீண்டும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி நிற்கின்றோம். இருப்பினும் கனத்த இதயத்துடன் - மனத்துடனேயே வரவேற்க வேண்டியுள்ளது என்றார் மாவை சோ.சேனாதிராசா.

No comments:

Post a Comment