Saturday 28 June 2014

சர்வதேச விசாரணை கோரும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்!

சிவாஜிலிங்கத்தின் பாதுகாப்பும் வாபஸ்
வியாழக்கிழமை, 26 ஜூன் 2014 18:35
-எம்.றொசாந்த்

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வழங்கப்பட்ட
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு புதன்கிழமை (25)
நள்ளிரவுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.

இது தொடர்பாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

'பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு எனக்கு 2001 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத காலப்பகுதியிலும் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கொழும்பிலிருந்த வந்த அறிவுறுத்தலுக்கமைய அந்தப்
பாதுகாப்பு புதன்கிழமை (25) நள்ளிரவு முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளது' என அவர்; மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே வடமாகாண சபை உறுப்பினர்களாக அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன் மற்றும் சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோரின் பொலிஸ் பாதுகாப்பினை யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் விலக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...