Thursday 12 November 2009

கண்ணோட்டம்-1

சித்தாந்த தளை

தன்னை அடிமைப் படுத்தும் முறைமையின் சித்தாந்த வரம்புக்குள் உட்பட்டு நின்று, தனது விடுதலையை அடையலாம் என விடாப்பிடியாக நம்பி போராடுகிற ஒரு சமூகத்தின் முட்டாள் தனத்தை மாற்றி, அதற்கு உண்மையான விடுதலையின் பாதையை உணர்த்துவது மனச்சோர்வளிக்கக் கூடிய மிகக் கடினமான நீண்டகால அரசியல் பணியாகும்.அதேவேளை அந்த அடிமை நுகத்தடியை அகற்றி எறியவேண்டும் என அச்சமூகம் உணர்ந்தால் ஒழிய வேறெந்த வழியிலும் அதற்கு விடிவு கிடையாது,இங்கே பலாத்காரம் என்பது சற்றும் பயனற்ற பிரயோகம் ஆகும்.மனிதாபிமானம் எதிரிகளுக்கே சேவை செய்யும். சமூக சிந்தனைகள் பொருளாதார வேர்களில் மையம் கொண்டவை.அவற்றின் மாறுதல் பொருளாதார முறையின் மாறுதலால் அல்லது பொருளாதார முறையை மாற்ற வேண்டும் என சீற்றம் கொண்ட மக்கள் பிரிவினர் அரசியல் அதிகாரம் அடைவதைப் பொறுத்தே நடைபெறக்கூடியதாகும்.இதன் கால அளவு வருடங்களை மிஞ்சி தசாப்தங்களை தாண்டி சகாப்தங்களில் நிறைவேறுகிற காரியமாகும். புரட்சிகர கொம்யூனிஸ்ட் இளைஞ்ஞர்கள் இந்த சமூக இயக்க விதியை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.நீண்டகால அரசியல் பிரச்சாரப் பணியில் தம்மை ஈடுபடுத்தவேண்டும்.புரட்சிகர பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்.
புரட்சி அறைகூவும்! புரட்சி நிறைவேறும்!!

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...