Monday 3 April 2017

சிங்களக் குடியேற்றத்தால் தனித்துவத்தை இழக்கும் ஈழத் தமிழர்கள்



குடியேற்றத்தால் தனித்துவத்தை இழக்கப்போகும் தமிழர்கள்

முல்லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள நாயா­றுப் பகு­தி­யில் பெரி­ய­ள­வி­லான சிங்­க­ளக் குடி­யேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முழு­வீச்­சில் இடம்­பெற்று வரு­வ­தாக முல்­லைத்­தீவு மாவட்­டத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்­கின்ற வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

நாட்­டின் எந்­தப் பாகத்­தி­லும் வசிப்­ப­தற்கு இலங்­கைக் குடி­ம­கன் ஒரு­வ­னுக்கு உரிமை உண்டு. இதை எவ­ரும் தடுத்து நிறுத்­தி­விட முடி­யாது. ஆனால்  ஓர் இனத்­த­வர் வாழு­கின்ற பகு­தி­யில் அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை அடாத்­தா­கப் பிடித்­து­வைத்து வேறொரு இனத்­த­வ­ரைக் குடி­யேற்­று­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. காணி அதி­கா­ரங்­கள்  கொழும்பு அர­சி­டமே உள்­ளது என்­ப­தற்­காக எதை­யும் செய்­து­விட முடி­யாது.

அண்டை நாடான இந்­தி­யா­வில் மாகாண அர­சு­க­ளுக்­குப் பொலிஸ், காணி அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. காணி அதி­கா­ரத்­தின் மூல­மாக சட்­ட­வி­ரோ­தக் குடி­யேற்­றங்­க ளைத் தடுப்­ப­தற்கு அங்­குள்ள மாகாண அர­சு­க­ளால் முடி­கின்­றது. ஆனால் இலங்­கை­யில் அது முடி­வ­தில்லை. இத­னால் சட்ட விரோ­த­மாக இடம்­பெ­று­கின்ற குடி­யேற்­றத் திட்­டங்களை  மாகாண அர­சு­க­ளால் தடுக்க முடி­வ­தில்லை.

முல்­லைத்­தீவு நாயாறுப் பகு­தி­யில் இடம்­பெ­று­கின்ற குடி­யேற்­றத்திட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பத்­தி­லேயே தடுக்­காது விட்­டால் காலப்­போக்­கில் இது­வொரு பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­வி­டும்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஏற்­க­னவே வெலி­ஓயா என்ற சிங்­க­ளப் பெய­ரி­லான மிகப் பெரிய குடி­யேற்­றத்­திட்­ட­மொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரிய  பிர­தே­சங்­க­ளான வடக்­கை­யும், கிழக்­கை­யும்  துண்­டித்து விடு ­கின்­ற­தொரு நட­வ­டிக்­கை­யா­கவே முல்­லைத்­தீ­வி­லி­ருந்து திரு­கோ­ண­ ம­லைக்­குச் செல்­லும் முக்­கிய பகு­தி­யைத் துண்­டாடி இந்­தக் குடி­ யேற்­றத்­திட்­டம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் வடக்­கி­லி­ருந்து கிழக்கு மாகா­ணத்­துக்­குப் பாது­காப்­பான பிர­யா­ணத்தை மேற்­கொள்ள முடி­யாத நிலை­யில் தமிழ் மக்­கள் இன்­னல்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

தமி­ழர்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பல இடங்­கள் இன்று கைந­ழு­விப் போன நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன. தென்­ன­ம­ர­வாடி, பத­வியா, கொக்­கி­ளாய், மண­லாறு ஆகிய இவற்­றுள் சில­வா­கும்.

இன்று நாயா­ றும் பறி­போ­கும் நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு தமி­ழர்­க­ளின் பூர்­வீ­க­மான நிலங்­கள் கண்­ணெ­திரே பறி­போ­வதை வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருக்­கவே எம்­மால்
முடி­கின்­றது. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் கூட எது­வுமே செய்ய முடி ­யாத நிலை­யில் கைக­ளைக் கட்­டிக் கொண்டு நிற்­கின்­ற­னர்.

நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­வு­டன் நாட்­டின் முத­லா­வது தலைமை அமைச்சரான டி.எஸ்.சேன­நா­யக்க கிழக்கு மாகா­ணத்­தில் மிகப் பெரி­ய­தொரு சிங்­க­ளக் குடி­யேற்­றத் திட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­னார். கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள வள­மான பிர­தே­சங்­க­ளில்  காலூன்­று­வ­தும் தமி­ழர்­களை அங்கு சிறு­பான்­மையின­ராக மாற்­று­வ­துமே இந்­தக் குடி­யேற்­றத் திட்­டத்­தின் நோக்­க­மா­கும்.  இது எதிர்­பார்த்­த­ப­டியே நிறை­வேறி வரு­வ­தைக் காண­மு­டி­கின் றது.

வடக்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் முல்­லைத்­தீவு, வவு­னியா மாவட்­டங்­க­ளின் எல்­லைக் கிரா­மங்­கள் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அங்­கி­ருந்து பரம்­ப­ரை­யாக வாழ்ந்த தமிழ் மக்­கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளனர்.

முல்­லைத்­தீவு மாவட்­டம் காட்டு வளத்­தை­யும், கடல் வளத்­தை­யும் , செழிப்­பான மண் வளத்­தை­யும் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது. அத்­து­டன் கற்­பா­றை­க­ளும்  நிறை­யவே காணப்­ப­டு­கின்­றது.

அது­மட்­டு­மல்­லாது ஆற்று மண­லும் நிறை­யவே கிடைக்­கின்­றன. விடு­த­லைப்­பு­லி ­கள் இருந்த வரை­யில் இயற்கை வளங்­கள் யாவும் பேணிப் பாது­காக்­கப்­பட்­டன. ஆனால் போர் ஓய்ந்­த­தன் பின்­னர் நிலமை தலை­கீ­ழாக மாறி­விட்­டது. வெளி­யி­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளால் காட்டு வளங்­கள் வகை தொகை­யின்றி அழிக்­கப்­பட்டு எடுத்­துச் செல்­லப்­ப­டு­கின்­றன. கற்­பா­றை­கள் வெடி­வைத்­துத் தகர்க்­கப்­பட்டு கருங்­கல் சல்­லி­க­ளாக விற்­கப்­ப­டு­கின்­றன.

இங்கு முகா­மிட்­டி­ருக்­கும் வெளி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் பெரு­ம­ள­வில் மணலை அகழ்ந்து வெளி­யி­டங்­க­ளுக்கு எடுத்­துச் செல்­கின்­ற­னர். ஆனால் உள்­ளூ­ரில் வீட்­டுத் திட்­டங்­க­ளுக்­குள் உள்­வாங்­கப்­பட்ட மக்­கள் தமது தேவைக்­கு­ரிய மண­லைப் பெறு­வ­தில் பெரும் சிர­மங்­களை  எதிர்­கொள்­கின்­ற­னர்.

வெளி­யூர் (சிங்கள*)மீன­வர்­கள் இங்கு நிரந்­த­ர­மா­கவே தங்கி நின்று  மீன்­பிடித்­தொ­ழி­லில் ஈடு­பட்டு வரு­வ­தால் உள்­ளூர்  மீன­வர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இவ்­வாறு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வாழ்­கின்ற தமிழ் மக்­கள் எல்லா வகை­யி­லும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இதே­வேளை திட்­ட­மி­டப்­பட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இன ­வி­கி­தா­சா­ரத்­தில் பெரும் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­வி­டப்­போ­கின்­றது. நாடா­ளு­மன்­றம், மாகா­ண­சபை, பிர­தேச சபை ஆகி­ய­வற்­றுக்­குப் பிர­தி­ நி­தி­க­ளைத் தெரிவு செய்­யும் போது தமி­ழர் தரப்­பின் விகி­தா­சா­ரம் குறை­வ­டைய நேரிட்­டு­வி­டும். இதை­விட வேலை­வாய்ப்பு, பல்­க­லைக்­க­ழக அனு­மதி ஆகி­ய­வற்­றி­லும் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டும்.

இலங்­கை­யில் மொத்­த­மாக ஒன்­பது மாகா­ணங்­கள் உள்­ளன. இதில்  வடக்கு  மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி­லேயே தமி­ழர்­கள் செறிந்து வாழ்­கின்­ற­னர். ஏனைய ஏழு மாவட்டங்­க­ளி­லும் பெரும்­பான்­மை­யின மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில் வடக்­குக் கிழக்­கில் குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தன் நோக்­கம் எந்த வகை­யி­லும்   ஏற்­றுக் கொள்­ளத்­தக்­க­தல்ல.

இஸ்­ரே­லும் பாலஸ்­தீ­னத்­தில் இவ்­வாறு தான் நடந்து கொள்­கின்­றது. இத­னால் பாலஸ்­தீன மக்­க­ளின் எதிர்­கா­லம் இருள் சூழ்ந்து காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு நிலை இங்­கும் ஏற்­ப­டப் போகின்­றது என்­ப­து­தான் யதார்த்­தம்.

நன்றி: சேரலாதன் உதயன்      * சேர்க்கை ENB

====================================================
பிற்குறிப்பு:

ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் தொடர்பான சில தகவல்களையும் அதன் விளைவுகளையும் சரியாகவே சுட்டிக்காட்டிய இச் செய்திக் குறிப்பாளர், தீர்வு என்று வருகின்ற போது அதிகாரப் பகிர்வு சகதிக்குள் வீழ்ந்து விடுகின்றார்.

குடியேற்றப் பிரச்சனை விவசாயப் பிரச்சனை, தேசிய இனப் பிரச்சனை,இதனை அதிகாரப் பரவல் மூலம் தீர்க்க முடியாது,சுய நிர்ணய உரிமை,பிரிவினை,பொது வாக்கெடுப்பு வழியில் தான் தீர்க்க முடியும்.சுபா
 

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...