Monday 17 October 2016

காவிரி- கழக ரயில் மறியப் போராட்டம்

 
 
 
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட கழகம் தொடர்ந்து போராடிவருகின்றது. மன்மோகன் ஆட்சிக் காலத்தில்  `முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்`! என்கிற நூலை வெளியிட்டது. இந்நூலானது காவிரி நதி நீர்ப் பிரச்சனையை இயங்கியல் பொருள்முதல்வாத மார்க்சிய நோக்கு நிலையில் ஆய்வு செய்த நூலாகும்.
 
இந்நூல் பின்வரும் கேள்விகளை எழுப்பி;

``முல்லைப் பெரியாற்று நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் சிக்கல் நீடித்து வருகிறது. இவ்வாறு சிக்கல் நிலவுவதற்கான காரணம் என்ன? ஆங்கிலேயே ஏகாதிபத்தியவாதிகளால் இந்த அணை எவ்வாறு கட்டப்பட்டது? முல்லை பெரியாறு அணைக்கான ஒப்பந்தம் தமிழர்களின் நலன்களுக்காக போடப்பட்டதா அல்லது காலனிய ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டல் நலன்களுக்காக போடப்பட்டதா? இந்த ஆறு இரண்டு தேசிய இனங்களுக்கு சொந்தமானதா அல்லது ஒரே இனத்திற்கு சொந்தமானதா? ஆற்றில் தமிழகத்தின் உரிமையை எவ்வாறு பாதுகாப்பது? நீர்ப் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்கு நீர் மிகையாக உள்ள கேரளாவிலிருந்து நீரை பெறுவதற்கான சிக்கலுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது? மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விடைகாண முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட வரலாற்றையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தன்மை பற்றியும், தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் பரிசீலனை செய்வோம்!`` இந்த முழுவிரிவான பரிசீலணையை கீழ்க்கண்ட நூலில் வாசகர்கள் கற்றறியலாம்.
 
`முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்` நூலில் இருந்து 
 
உச்ச நீதிமன்ற தீர்ப்பையேற்று மேலாண்மை ஆணையம் அமைப்பதையும்,மேலதிக நீர் வழங்குவதையும் கர்நாடக அரசு மறுத்த சூழலில் மீண்டும் பிரச்சனை தோன்றியது.
 
இச் சூழலை ஒட்டி கழகம் பின் வரும் முழகக்கங்களை முன் வைத்து அரசியல் பிரச்சாரம் செய்தது.
 
 
 

என முழங்கி சுவரொட்டி இயக்கம் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக 25-10-2016 செவ்வாய் மாலை 4.00 மணியளவில் சென்னை மத்திய (சென்ரல்) இரயில் நிலையத்தில் இரயில் மறிப்புப் போராட்டத்துக்கு  அறைகூவல் விடுத்துள்ளது
 
 
 
 
 கழக காவேரி, சென்னை ரயில் மறியல் போராட்டம் வெல்க!
 

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...