Wednesday 20 April 2016

கழகம்: தேர்தல் புறக்கணிப்பு-மே நாள் சூளுரை

ந்தியாவின் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நசீம் சைதி அவர்களின் அறிவிப்பின் படி,தமிழ்நாட்டில், வரும் மே 16 ஆம் நாள் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும், மே 16ஆம் நாள் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கவுள்ளது. அசாமில் இரண்டு கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் ஆறு கட்டங்களாகவும் தேர்தல் நடக்கவுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 19ஆம் நாள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே நாள், உழைக்கும் மக்களின் புரட்சித் திருநாள் மாதத்தில், தமிழக நாடாளுமன்ற தேர்தல் கொடுநாள் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தையும், மே நாள் இயக்க சூளுரை இயக்கத்தையும் ஒரு சேர கழகம் முன்னெடுக்கின்றது.

தேர்தல் குறித்து:
`நாடாளுமன்ற மாயையில் மக்களை ஆழ்த்தும் தமிழக சட்ட மன்ற தேர்தலை 
புறக்கணிப்போம்` என முழங்குகின்றது,

மே நாள் குறித்து:
`முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்போம்` என மே நாளில் சூளுரைத்துள்ளது.

மே நாளை யுத்த தந்திர வழியில்  இருந்தும், தேர்தலை செயல் தந்திர வழியில் இருந்தும் நோக்கியுள்ளது.

இந்த அணுகு முறையினதும்,ஆய்வினதும் அடிப்படையில் அரசியல் போர்த்தந்திர வழியில் பின்வரும் முழக்கங்களை முன் வைத்துள்ளது.



 இதனைப் பிரச்சாரத்துக்கு எடுத்துச் செல்ல, பிரச்சாரம், பொதுக்கூட்டம். ஊர்வலம் என்கிற லெனினிய வெகுஜன மார்க்கத்தின் வழி நடக்கின்றது!
கழகப் பிரசார இயக்கம் வெல்க!
பாராளமன்ற மாயை ஒழிக!
புதிய ஜனநாயகப் புரட்சி ஒளிர்க!

No comments:

Post a Comment

உல்லாச புரியாகும் மைய மலையகமும், Spain இல் உல்லாசத் துறை எதிர்ப்பும்.

Thousands protest in Spain's Canary Islands over mass tourism By  Borja Suarez    April 21, 2024   SANTA CRUZ DE TENERIFE, Spain, April ...