அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Thursday, 14 April 2016

கலைமகளின் ஆனந்தபுர முற்றுகைச் சமர் ஒளிப்பதிவு

கலைமகளின் ஆனந்தபுர முற்றுகைச் சமர்
                                ஒளி நாடும் ஒரு முன்னுரை.
Published on 4 Apr 2016

''தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நினைவில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய பல போர்க்களங்கள் நாம் கண்டுள்ளோம்.

வியப்பின் உச்சியில் ஆழ்த்தக்கூடிய சாதனைகளைப் படைத்த வீர வரலாறுகள் எமக்கே சொந்தம்.

உலக விடுதலைப் போராட்டங்களை எடுத்துப் பார்க்குமிடத்து அவற்றை விஞ்சிய தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் ...... எங்கள் தமிழீழ விடுதலைப் போராளிகள் தமது வாழ்க்கையாகவே கருதி வாழ்ந்துள்ளார்கள் என்பது புலப்படும்.

ஒவ்வொரு மாவீரர்களின் வாழ்க்கையும் ஒரு பெரிய சரித்திரமே. உலகின் மிகச்சிறந்த தலைமைத்துவைத்தால் வழிநடத்தப்பட்ட, வீரஞ்செறிந்த விடுதலைப்பாதை பல பாடங்களையும் எமக்குக் கற்றுத் தந்துள்ளது என்றால் மிகையல்ல.

அந்த வகையிலே மிக வித்தியாசமானதொரு களமாக ஆனந்தபுரத்தில் நிகழ்ந்தேறியே முற்றுகைப் போர், (மறந்து)விடமுடியாத, மனங் கனக்கின்ற ஒரு நெருக்கடி நிறைந்த சூழ்நிலையின் யதார்த்தம்.

இன்னும், ஆனந்தபுரத்தில் நடந்தேறிய முற்றுகைப் போரை முழுவதுமாய் எழுதுவதென்பது இலகுவானதல்ல.

இருப்பினும் தொடர்கிறேன். 

பல வருடங்களாக தமிழீழ விடுதலைப்போர், பல பரிமாணங்களைக் கடந்து(ம்) நடந்து கொண்டிருந்தாலும், 2006 தொடக்கம் 2009ம் ஆண்டு வரை மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு உலக வல்லாதிக்க நாடுகளின் முழுமையான ஒத்துழைப்போடு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழினவழிப்பின் கொடூரத்தை ஒருபோதும் மறந்துவிட முடியாது.''

எனினும் இதையும் வெல்வோம்!
                                                                             தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!!

ஈழப்போராளி கலைமகள்

No comments:

Post a Comment