Thursday 4 February 2016

காணாமல் ஆக்கப்பட்ட சுதந்திரம்!

காணாமல் ஆக்கப்பட்ட சுதந்திரம்!
காலி முகத்திடலில் ரணில் மைத்திரி சம்பந்தன் பாசிசக் கும்பல் 68வது சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது;

ஈழ நகரங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் இரத்த உரித்துக்கள் அவர்களைக் கண்டுபிடித்து தருமாறு போராடிக் கொண்டிருக்கின்றார்கள்!


நாட்டுக்கோ சுதந்திரம் எமக்கோ கண்ணீர்! சுதந்திர தினத்தன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!



மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டம் இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தன்று இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவின் அருகாமையில் இடம்பெற்றது.



தாயக மக்களின் விடுதலையை வலியுறுத்தியும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் நோக்கோடும் மேற்கொள்ளப்பட்ட குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனோரின் குடும்ப உறவினர்கள் காணாமால் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்திய வண்ணமும் 'எனது பிள்ளை எனக்கு வேண்டும்', 'அரசே! எனது கணவரை விடுதலை செய்' 'தமிழர்களுக்கு ஒரு நியாயமா? மற்றவர்களுக்கு வேறு நியாயமா?' 'அரசே! கண்டிக்கிறோம் உம்மை கண்டிக்கிறோம்',அரசே! எங்கே எமது பிள்ளைகள் கண்டுபிடி கண்டுபிடி' எமது பிள்ளைகள் எமக்கு வேண்டும்,போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திய வண்ணமிருந்தனர்.



இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் லயன் ஏ. செல்வேந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உருப்பினர் பா.அரியநேந்திரன்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் கறுப்புக் கொடி போராட்டம்
04-02-2016 12:28 PM -நவரத்தினம் கபில்நாத்




வவுனியா நகரசபைக்கு முன்பாக உளள் பொங்குதமிழ் தூபிக்கு அருகில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியா பிரஜைகள் குழுவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற  இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள், தமது வாயை கறுப்புத் துணியால் கட்டியவாறும் கறுப்பு நிறக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.


முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
04-02-2016 12:01 PM  -சண்முகம் தவசீலன்



இலங்கையின் 68ஆவது சுதந்திரதினமான இன்று, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலை பத்துமணியளவில் முல்லைத்தீவு கச்சேரிக்கு அருகிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் ஒன்று கூடிய உறவினர்கள் அவ்விடத்திலிருந்து கச்சேரிவரை ஊர்வலமாக சென்று கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
தகவல்: தமிழ் மிரர், உதயன்


No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...