Thursday 16 April 2015

ஆந்திர அரசின் தமிழகக் கூலித் தொழிலாளர் படுகொலையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!

மிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திராவில் செம்மரம் வெட்டுகிறார்கள் என்று கூறி நூற்றுக்கணக்கானோரை ஆந்திரா போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இந்நிலையில் இம்மாதம் 8ஆம் திகதியன்று ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் தமிழக தொழிலாளர்கள் 200 பேர் செம்மரம் வெட்டுவதாக கூறி டிஐஜி காந்தராவ் தலைமையிலான `செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்` அன்று காலை தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 20 தமிழ்த் தொழிலாளர்களைப் படுகொலை செய்துள்ளனர்.  மேலும் பல தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இப்படு பாதகக் கொலையில்  பலியானோர் தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இப்படுகொலை மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. 
மிக நெருக்கத்தில் வைத்து தானியங்கித் துப்பாக்கிகளால் ஆந்திர போலீஸார் சுட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
பலருக்கு நெற்றியில் குண்டு பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆந்திர மாநில நிர்வாகத்தின் இந்த அடக்குமுறையை எதிர்த்து கழக முழக்கம் ஏந்திய பதாகை.


===================================================================
20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலையை கண்டித்து
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
கண்டன ஆர்ப்பாட்டம் !
==============================================
ஆரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ,ரௌண்டன பேருந்து நிறுத்தம் .
நாள் :20/04/2015 திங்கள் மாலை 4.00 p.m.
தலைமை : தோழர்  ஞானம் மாநில அமைப்பளர் ம ஜ இ க .
சிறப்புரை : தோழர்  மனோகரன் ம ஜ இ க சென்னை
நன்றியுரை ; தோழர் .மயகண்ணன்

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட ம ஜ இ க அமைப்பாளர்.
=======================================================================

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...