Monday 1 December 2014

இந்தியாவின் பார்வை மைத்ரிபாலவின் பக்கம்!

இந்தியாவின் பார்வை மைத்ரிபாலவின் பக்கம்! 
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மைத்ரிபாலவை சந்திக்கிறார்

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைதிரிபால சிறிசேனவின் பக்கமும் இந்திய அரசின் கவனம் திரும்பியுள்ளது.

இதற்கமைய இலங்கைக்கு நாளை மறுதினம் திங்கட்கிழமை விஜயம் செய்யவுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து

கலந்துரையாடுவார் என இந்தியாவின் முன்னணி நாளிதழான இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காலியில் நடைபெறவுள்ள சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்புகளின் போது கடற்பாதுகாப்பு குறித்து ஆராயப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் அதிகரித்துவரும் சீன இராணுவ பிரசன்னம் குறித்தும்

இந்தியாவின் கவலைகளையும், எதிர்ப்பையும் இந்த சந்திப்புக்களின் போது டோவல் பதிவுசெய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துசென்ற நிலையில் கடந்த மாதம் அவசரமாக புதுடெல்லிக்கு வரவழைத்திருந்த இலங்கையின் பாதுகாப்புச்

செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் இந்தியாவின் எரிச்சலையும், கண்டனத்தையும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவால் நேரடியாக தெரியப்படுத்தியிருந்தார்.

எனினும் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துசெல்ல இலங்கை அனுமதித்திருந்தது. இந்த நிலையிலேயே

மீண்டும் டோவால் சீன விவகாரம் குறித்த இந்தியாவின் கரிசணை தொடர்பில் தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்து எதிரணியின் பொது வேட்பாளராக

நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையும் டோவல் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

அத்துடன் பொது வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை வழங்கிவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க

ஆகியோரையும் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவால் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று தமிழ், முஸ்லீம் ஆகிய சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதான

கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் இதுவரை பகிரங்கமாக அறிவிக்காத நிலையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது, முக்கியமாக

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தே கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...