Friday 12 September 2014

செந்தோழர்கள் அப்பு பாலன் சிவப்பு அஞ்சலிக் காட்சிகள்

செப்டம்பர் – 12, தியாகிகள் நினைவு நாள்!

தோழர்கள் அப்பு  பாலன் நினைவு நீடூழி வாழ்க!

நக்சல்பாரிப் புரட்சி இயக்கத் தோழர் பாலன் தர்மபுரி மாவட்டத்தில் ஜனநாயகப் புரட்சிகரப் போரட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவதில் முன்னணித் தோழராக செயல்பட்டார். புரட்சிகர இயக்கத்தை அழிக்கும் நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்திய நரவேட்டையில் 1980 செப்.12ல் தோழர் பாலன் கொல்லப்பட்டார். தோழர் பாலனின் நினைவு நாளை நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூரும் நாளாகவும், அவர்களின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதி ஏற்கும் நாளாகவும் கழகம் கடைப்பிடித்து வருகிறது.

இவ்வாண்டு,

மோடி அரசே,

நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!

ஜெயா அரசே,

மோடியின் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றாதே!

என்கிற பிரதான முழக்கங்களின் அடிப்படையில், ஜனநாயக விடுதலைப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.பொதுக்கூட்டம்,சுவரொட்டிப் பிரச்சாரம், இணைய சமூகப் பிரச்சாரம், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அப்பு பாலன் சிலை நோக்கி அணிவகுத்துச் சென்று செங்கொடியேற்றி,செம்மலர் தூவி,சிவப்பு அஞ்சலி செலுத்தவும், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் பொதுமக்களுக்கு அழைப்பு விடப்பட்டது.

ஆனால் `அடிமைப் பெண்` ஜெயா அரசு,அப்பு பாலன் சிலை அரங்கில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்தது. இத்தடைகளுக்கு மத்தியில், நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு அப்பு பாலன் சிலை அரங்கில் சிவப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்புரட்சி நிகழ்வுகளின் சில காட்சிப்படங்கள்.



பொதுக்கூட்டத் தடையை எதிர்த்து சிவப்பு அஞ்சலிக்கு அறைகூவிய கழகச் சுவரொட்டி

சிவப்பு அஞ்சலி ஊர்வலத்தின் முன்னிலைப் பதாகை


ஊர்வலத்தில் அணிவகுத்த மக்கள் மாதர்கள்


செம்மலர் தூவல்,செங்கொடி ஏற்றல், சிவப்பு அஞ்சலி!


சிலையின் உச்சியில் கழகத் தோழர்கள் புரட்சி முழக்கம்!



மோடி அரசே,

« நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!

« அநியாய அந்நியக் கடன்களை இரத்து செய்!

« ‘வளர்ச்சி’ என்ற பெயரால் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்காதே!

« ‘கசப்பு மருந்து’ என்ற பேரால் மக்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மானியங்களை வெட்டாதே!

« இரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!

« விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராடுவோம்!

« வேளாண்மைத் துறையைக் குழும மயமாக்குவதை எதிர்ப்போம்!

« நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

« விவசாயிகளை தற்கொலைக்கும் பட்டினிச் சாவிற்கும் தள்ளுவதை எதிர்த்துப் போராடுவோம்!

« நிலப்பிரபுத்துவ சாதி, தீண்டாமை கொடுமைகளை ஒழிக்கப் போராடுவோம்!

« ஈழத் தமிழ் மக்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக இராஜபட்சே கும்பலுக்கு அடிவருடியாகச் செயல்படுவதை அனுமதியோம்!

« கச்சத் தீவை மீட்போம்! தமிழர் நலனையும், மீனவர் உரிமைகளையும் பாதுகாப்போம்!

« ஆங்கிலம், இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவோம்!

« தாய்த் தமிழை ஆட்சிமொழி, பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!

« இந்து மதவாத ஆதிக்கத்திற்கு மக்களை அடிமைப்படுத்தும் சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையிலிருந்து நீக்கு!

ஜெயா அரசே!

« மோடியின் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றாதே!

« பாசிச குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெறு!



மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு                                                             செப்டம்பர், 2014

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...