Sunday 29 June 2014

அளுத்கம கொலை விசாரணை: துப்பாக்கியா? கத்தியா?

அளுத்கம வன்முறைகள் காவல்துறை விசாரணையில் பொய்யான விபரங்கள் பதிவு – முஸ்லிம்கள் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 00:24 GMT ]

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பான, காவல்துறை விசாரணையில் பொய்யான தகவல்கள் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தநிலையில், அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து, உண்மை நிலையை கண்டறிய அதிபர் ஆணைக்குழு விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பல காவல்துறைக் குழுக்கள் விசாரணைகளை நடத்துகின்ற போதிலும், அந்த விசாரணைகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளதாலேயே தாம் இந்தக் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக, முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலர் எம்.ரி.ஹசன் அலி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழு மூவினங்களையும் சேர்ந்த, துறைசார்ந்த மற்றும் அனுபவம் கொண்டவர்களை உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அளுத்கம சம்பவத்தில் உயிரிழந்த முஸ்லிம்கள், துப்பாக்கிச் சூட்டிலேயே இறந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். 
ஆனால் கத்திக்குத்துக்கு இலக்காகி அவர்கள் உயிரிழந்ததாக மரணச் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஹசன் அலி கூறியுள்ளார். 

காவல்துறை விசாரணைகளின் போது உண்மைக்கு புறம்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களினால் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சுதந்திரமான ஆணைக்குழுவொன்றின் மூலமே உண்மை நிலையை அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...