அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Monday, 2 June 2014

ஜனாதிபதியிடம் மோடி விடுத்த கோரிக்கை `13அமூல்`.

ஜனாதிபதியிடம் மோடி விடுத்த கோரிக்கையை முழு உலகமும் அறியும்!- தயான் ஜயதிலக
Posted By Thara On May 31st, 2014 02:39 PM | செய்திகள், பிரதான செய்திகள்

இலங்கை தமிழர் பிரச்சினை தீர்க்க இந்தியாவின் உதவியை பெற இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி மிக தெளிவாக கூறியுள்ளதாக முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்களுடனான அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் அதற்கான 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்துமாறும் மோடி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியதாக இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்திருந்தார்.

மோடி கூறியதை இலங்கை செய்யுமா இல்லையா என்பது வேறு பிரச்சினை.

எனினும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவின் உதவியை பெற வேண்டுமாயின் இலங்கை நிறைவேற்ற வேண்டிய அடிப்படையான நிபந்தனையை இந்தியாவின் புதிய பிரதமர் தெளிவாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர், இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ஜனாதிபதி மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆகியோருடன் நேர்காணலை நடத்தியது.

இதன் போது மோடி, ஜனாதிபதி இடையிலான சந்திப்பில் சொல்லப்பட்ட சில விடயங்களையும் கூறினார்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு மோடி, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாக யாழ் மாநகர முதல்வர் தெரிவித்திருந்தார்.

மோடி இப்படியான கோரிக்கையை விடுத்தது இரகசியமான ஒன்றல்ல. இதனை முழு இந்தியா மட்டுமல்ல முழு உலகமும் அறியும் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment