Tuesday 3 December 2013

யுத்த இழப்புக் கணக்கீட்டால் சொத்திழக்கும் தமிழர்!


தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும்,

வெளிநாடுகளில் உள்ள வடக்கு மக்களின் அனைத்து சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும்! 

அரசாங்கம் அதிரடி அறிவிப்பு
December 02, 20131:37 pm

வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. முக்கியமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வீடுகள் என இனங்காணப்படும் வீடுகளை உடனடியாக அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

போர் காரணமாக வடக்கில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வீடுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்ததுடன் பின்னர் இராணுவத்தினர் அவற்றை கைப்பற்றி பயன்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...