Tuesday 23 July 2013

13 ஐ பாதுகாக்கும் ரொட்ஸ்கிய திரிபுவாதிகளின் தமிழின விரோத வெறியாட்டம்!

விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் 13ஐ பாதுகாப்பதற்கு தடைகள் வரும்: திஸ்ஸவிதாரண
By General
2013-07-23 10:34:58

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் 13 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவதற்கும் மாகாண சபை முறைமையை வலுப்படுத்துவதற்கும் பாரிய தடைகள் ஏற்படும். தென்னிலங்கை இனவாத கட்சிகள் விக்னேஸ்வரன் விடயத்தை பாரிய விவகாரகமாக முன்னிறுத்தி 13 ஐ பாதுகாக்கும் எமது முயற்சிக்கு தடையாக இருப்பார்கள் என்று முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பிரிவினைவாதத்துக்கு எதிரான மற்றும் அன்றிலிருந்து புலிகளை எதிர்த்து செயற்பட்டுவந்த ஆனந்த சங்கரி போன்ற ஒருவரை முதலமைச்சர் வேட்பாராள கூட்டமைப்பு நிறுத்தியிருந்தால் அது 13 ஆம் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் பாதுகாக்கும் எமது முயற்சிக்கு பாரிய பலமாக அமைந்திருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவின் ஊடாக இனவாத கட்சிகளுக்கு தற்போது 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட வலுவான ஆயுதம் ஒன்று கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் அதற்கான தயார் நிலை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயங்களை முன்வைத்தார். அமைச்சர் திஸ்ஸ விதாரண இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்

வட மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவானது ஒரு ஆரோக்கியமான தீர்மானமாக தெரியவில்லை.

காரணம் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் 13 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவதற்கும் மாகாண சபை முறைமையை வலுப்படுத்துவதற்கும் பாரிய தடைகள் எற்படும். விக்னேஸ்வரனின் நியமனமானது 13 ஆம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான பின்னணிக்கான பலத்தை மேலும் அதிகரிக்கும்.

காரணம் தென்னிலங்கை இனவாத கட்சிகள் விக்னேஸ்வரன் விடயத்தை பாரிய விவகாரகமாக முன்னிறுத்தி 13 ஐ பாதுகாக்கும் எமது முயற்சிக்கு தடையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புலம்பெயர் மக்களும் விக்னேஸ்வரனின் நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது சரியான தீர்மானம் என்று புலம்பெயர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இந்த விடயங்களை தென்னிலங்ககையில் உள்ள இனவாத கட்சியினர் முன்னிறுத்தி 13 ஆவது திருத்தத்தை பலப்படுத்துவது ஆபத்தாக அமைந்துவிடும் என்று பிரசாரம் செய்வார்கள். அவ்வாறான பிரசாரமானது 13 ஆவது திருத்தத்தை பாதுகாக்கவேண்டும் என்ற எமது முயற்சிகளுக்கு பாரிய தடையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

கூட்டமைப்பு விக்னேஸ்வரனுக்கு பதிலாக பிரிவினைவாதத்துக்கு எதிராக அன்றிலிருந்து செயற்பட்டுவந்த ஆனந்த சங்கரி போன்ற ஒருவரை முதலமைச்சர் வேட்பாராள கூட்டமைப்பு நிறுத்தியிருந்தால் அது 13 ஆம் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் பாதுகாக்கும் எமது முயற்சிக்கு பாரிய பலமாக அமைந்திருக்கும். ஆனந்த சங்கரி என்பவர் தென்னிலங்களை மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்பதுடன் இடதுசாரி கட்சிகளுடனும் தொடர்புகளை கொண்டுள்ளவர்.

எனவே அவரை முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு நிறுத்தியிருந்தால் தென்னிலங்கையின் இனவாத கட்சிகளிடம் இருந்து பாரிய எதிர்ப்பு கிளம்பியிருக்காது. மேலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபை முறைமையையும் பாரிய தடைகள் இன்றி பலப்படுத்தியிருக்கலாம்.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பின. ஆனால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வட மாகாண சபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளோம். மேலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் கைவைக்க முயற்சிக்கப்பட்டது. அதனையும் ஒருவாறு பாதுகாத்துவருகின்றோம்.

ஆனால் தற்போது கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் காரணமாக இனவாத கட்சிகளின் தர்க்கங்கள் மேலோங்கும் நிலைமையே காணப்படுகின்றது. இதன்மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யவேண்டும் என்ற தரப்பினரின் கோஷங்கள் பலமடையும். இனவாத கட்சிகளுக்கு தற்போது 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட வலுவான ஆயுதம் ஒன்று கிடைத்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...