Tuesday 22 January 2013

விழுப்புரத்தில் கழகம் போர்க்கொடி! கூடங்குளம் அணு உலையைத் திற!



கூடங்குளம் அணு உலையைத் திற! கழகம் போர்க்கொடி! ! 

விழுப்புரத்தில் கழக  முழக்கம்,

கூடங்குளம் அணு உலையைத் திற!

கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்திக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆனபின்பும், எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்தும், மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலமும் எப்படியாவது அணு உலையை மூடிவிடவேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மத்திய அரசாங்கமோ நட்ட ஈடு, மற்றும் பாதுகாப்பு பிரச்சினையை தீர்த்துவைத்து, அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து
அணுமின் நிலையத்தை திறப்பதற்கு முழுமுயற்சி செய்யவில்லை. உச்சநீதிமன்றம் அணுசக்தி அரசியலையோ, தொண்டு நிறுவனங்களின் உள்ளார்ந்த நோக்கங்களையோ புரிந்துகொள்ள மறுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அணு உலையை மூடச்சொல்வோம் எனக் கூறியது. அணு உலை மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு என்பது சிந்துபாத் கன்னித்தீவு கதைப்போல் தொடர்கிறது. அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான் என்றும், அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது ஆபத்து என்றும் கிறித்துவத் திருச்சபைகளும், தொண்டுநிறுவனங்களும், அமெரிக்காவின் இராணுவ விஞ்ஞானிகளும் அணு விஞ்ஞானத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். பூமி தட்டைதான் என்றும், நெருப்பு கண்டுபிடிப்பை எதிர்த்தும்,விஞ்ஞானிகளை கொன்றொழித்த இந்த பிற்போக்கு சக்திகள்தான் இன்று அணுசக்தியை எதிர்க்கின்றன.

அணுசக்திக்கு எதிராக அவர்கள் எழுப்புகின்ற ‘அறிவுபூர்வமான’ கேள்விகளுக்கு யாரும் பதிலளிக்கவில்லை என்று இந்த ஞானசூன்யங்கள்
பேசித்திரிகின்றன.

(விரிவான படிப்புக்கு இணைப்பை அழுத்துக)

http://samaran1917.blogspot.co.uk/2013/01/blog-post.html

=========================================
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் விழுப்புர ஆர்ப்பாட்ட (10-01-13) சமரன் பிரசுரத்தில் இருந்து.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...