Sunday 9 December 2012

கண்டியில் இஸ்லாமிய தமிழர்களை விரட்டும் இனவெறிச் சுவரொட்டிப் பிரச்சாரம்! யாழ்முஸ்லிம் இணையம் கண்டனம்..

வீரகேசரிச் செய்தி:

'2025 இல் இலங்கை சபரிஸ்தான் ஆகும்": கண்டியில் இனக்குரோதமான சுவரொட்டிகள்
By Hafeez
2012-12-09 14:22:06

'2025இல் இலங்கை சபரிஸ்தான் ஆகும். முஸ்லிம் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குவோமா?" என இனக்குரோதமான சுவரொட்டிகள் பேரின வாதிகளால் கண்டி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகள் சிலவற்றிலும் ஒட்டப்பட்டுள்ளன.

எதுவித இன மத முரண்பாடுகள் இன்றி சகல இனங்களும் ஒற்றுமையாக வாழும் கண்டியில் இப்படியான சிங்கள மொழியில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளால் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கண்டியில் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் பிரசாரச் சுவரொட்டி:
'2025இல் இலங்கை சபரிஸ்தான் ஆகும். முஸ்லிம் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களைவாங்குவோமா?"
யாழ்முஸ்லிம் இணையம் கண்டனம்.

2025 ம் ஆண்டு இலங்கையின் பெயர் மாற்றப்படுகிறது..!
Posted: December 9, 2012 in Uncategorized
(ஜே.எம்)

கண்டி மாநகர் என்பது முற்றிலும் ஒரு மாறுபட்ட அமைப்பைக் கொண்டது. அதாவது நீண்டகாலமாக மூவினங்களும் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் வாழ்கின்ற ஒருபகுதி.

ஆங்காங்கே சிறு சம்பவங்கள் ஏற்பட்ட போதும் அவை வெளியாரால் மேடை ஏற்றப்பட்டதே தவிர உள்ளுர் மக்கள் வெளிப்படையாக ஈடுபடுவதுமில்லை.

அப்படி பெரும்பான்மை இன கண்டி மக்களிடத்தில் இன ரீதியான குரோத உணர்வுகளை காண்பதற்கும் இல்லை.

கதை என்னவென்றால் அனுராதபுரம், தம்புள்ளை, தெஹிவளை, ராஜகிரிய, குருநாகல், பதுளை… என வந்துள்ள ஒருவகையான உணர்வு கண்டிப் பக்கமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது என்பது தான்.


நேற்று (8.12.2012) கண்டி நகரிலும் சுற்றுப்புறங்களிலும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி எதைக் கட்டியம் கூறுகிறது என்பதை, யூகிக்க முடியுமே தவிர உறுதியாக எதையும் கூறமுடியாதுள்ளது.

ஓன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது பேரினவாதிகளின் அடுத்த இலக்கு கண்டி என்பது. இதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறமுடியும். ஓன்று இத்துடன் உள்ள சுவரொட்டி.

மற்றது கண்டி மீராமக்கம் பள்ளியில் முற்பக்க சுவரைப் பர்த்தால் தெரியும் அது என்ன என்பது.

மீராமக்காம் தர்ஹா மற்றும் பள்ளி போன்றன அமைந்துள்ள இடம் சிங்கள மன்னர் காலத்தில் முஸ்லிம்களுக்கு தானம் வழங்கப்ட்டது. அதுவும் அஸ்கிரிய பீடத்திற்குச் சொந்தமான காணியிலாகும்.

நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த இடத்தில் அஸ்கிரிய பீடமும் மீராமக்கம் பள்ளியும் அயல் வீடுகள் போன்று காணப்படலாம். அதற்காக நாம் எமது பள்ளியை தாரை வார்க்கத் தேவையில்லை. அது அவர்களுக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடவும் முடியாது.

ஆனால் அதன் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது ‘அஸ்கிரிய விகாரைப் பிரதேசம்’ என்று.

பழக்கப்பட்ட எம்மவர்களுக்கு அது புரிவதில்லை. ஏனெனில் அஸ்கிரிய பிரதேசத்திற்கு போகும் பாதையை அல்லவா அது குறிக்கிறது என்று நாம் கண்டும் காணததுமாக உள்ளோம் இன்னும் பலவருடங்கள் சென்று பள்ளிச்சுவரிலே அஸ்கிரிய விகாரைப்பிரதேசம் எனப் பொறிக்கப்பட்டுள்ளதே. இது நீண்டகாலமாவே உள்ளதே. எனவே இது எமக்கு சொந்மதானது என
ஒருசாரார் உரிமை கொண்டாட வந்தாலும் வருவார்கள்.

இன்று தீகவாப்பி, கதிர்காமம் புனித பிரதேசம், பலாங்கொடையிலுள்ள ஜெய்லானியை அண்மித்த பகுதி என எவ்வளவோ உதாரணம் கூறலாம். இப்படி உரிமை கொண்டாடும் இடங்கள் எல்லாம் முன்னைய ஆதாரங்களை வைத்தே சொல்லப்படுகிறது. அப்படியாயின் இதுவும் பின் ஒரு
காலத்தில் முன் ஆதாரமாகலாமே. ஏதஜர் காலத்தில் கபளீகரம் செய்யப்படலாமே.

அத்துடன் கண்டியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை உற்று நோக்கினால் சில உண்மைகள் தெளிவாகிறது. இது எவனோ ஒரு கோமாளி செய்தான் எனக் கருத முடியாது. ஏனெனில் இவ்வாறான போஸ்டர்கள் தொடர்ந்து எழுதிப் பழக்கப்பட்ட ஒருவரது கைவண்ணமாக உள்ளது. எனவே அதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட குழு செயற்படுகிறது என்பது தெளிவு.

அத்துடன் ஒட்டப்பட்டுள்ள இடங்கள் மறைவான இடங்கள் அல்ல. சன நெரிசல் மற்றும் பாதுகாப்புப் படையினர் போன்றவர்கள் நடமாடும் மிகப் பிரதான சந்தி எப்பொழுதும் பொலீஸார் சேவையில் இருக்கும் இடம். தைரியமாகச் சென்று ஒட்டுவதற்கு சாதாணை ஒருவனால்
முடியாது.

மேலும் எமது சிந்தனையில் உதிக்காத யாருமே எதிர்பார்த்திராத ஒரு தனிநாட்டுப் பெயர் குறிப்பிடப்படுகிறது. அது …ஸ்தான் என முடிவதனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கசகிஸ்தான், என்ற அடிப்படையில் இதுவும் ஒரு ..ஸ்தான். சபரிஸ்தான் என்றால் என்ன? என்ற விபரம் தெரியாது.

அத்துடன் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று அதில் கூறப்படவில்லை. வாங்குவோமா? எனக் கேட்பதன் மூலம் மிகப் புத்தி சாதுர்யமாக விசக் கருத்தைப் புகட்டுவதாக உள்ளது. இது முஸ்லிம் வர்த்தகர்கள் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

2025ம் ஆண்டு இலங்கை முஸ்லிம் நாடாகும் என்று கூறுவதற்கு எது  ஆதாரம் என்று தெரியவில்லை.

எனவே கூட்டு மொத்தமாக முஸ்லிமகள் மீது பொறாமை கொண்டு ஒரு குழு இயங்குவதையும் சட்டத்தை கையில் வைத்திருப்போர் கண்டும் காணாததுமாக இருப்பதும் தொட்டிலை ஆட்டும் செயல் என்பதும் தெளிவு. இன்னும் குழந்தையை கிள்ளத் துவங்கவில்லை. இன்று தொட்டிலை ஆட்டும் அதே கைகள் குழந்தையை கிள்ளி விட்ட பின்பும் ஆட்டமுடியும்.
 
எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்பதில் தீர்க்கமான முடிவு தேவை. எம்மை தூண்டுகிறார்கள். தூண்டி விட்டு மோதப் பார்க்கிரார்கள் என்பது தெளிவு. எனவே நாம் பொறுமைகாக்க வேண்டும். அதனால்தானோ சபர் – சபரிஸ்தான்(பொறுமை) எனப் பெயர்வைத்துள்ளார்களோ தெரியாது. அல்லது பர்மிய மொழியில் ஏதேனும் கருத்துக்கள் உள்ளதோ தெரியவில்லை.
 
jaffnamuslim கருதும் பதில் நடவடிக்கை: (தலைப்பு நமது)
 
ஆனால் இத்தவறான எண்ணம் பற்றி எம்மால் இயன்றவரை பெரும்பான்மை நண்பர்களிடம் தெளிவுபடுத்துவது தனிநபர்களின் ஒரு தார்மீகக் கடமையாகும். அதாவது ஆட்சியைக் கைப்பற்றும் எந்த எண்ணமும் எம்மிடம் இல்லை. அதற்கான எந்த முயற்சியும் எம்மிடமில்லை. என்பதை தெளிவு படுத்த வேண்டும். இதை அமைப்பு ரீதியாகச் செய்வதை விட தனிப்பட்
ரீதியில் தத்தமது நண்பர்களுக்கு மத்தியில் அல்லது தொழில் செய்யுமிடத்து சகபாடிகளுடன் அல்லது வர்த்தகத் தொடர்புகளின் போது நாம் பிரதி பலிக்கலாம்.

மாறாக வர்த்தக நடிவடிக்கைகளின் போது ஒரு முஹ்மீன் என்பதை மறந்து சொற்ப லாபத்திற்காக பொய்யையும் ஏமாற்று வித்தைகளையும் அரங்கேற்றுவோமாயின் இது அல்ல இதைவிடப் பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.

அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக.

source :jaffnamuslim (அழுத்தம் நமது)

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...