Wednesday 26 September 2012

அந்நிய நிறுவனத்திடம் வாடகைக்கு ''மதியுரை'' பெறும் 'தமிழ்த் தேசிய(!)' கூட்டமைப்பு

Verite Research நிறுவனத்துக்கும் கூட்டமைப்புக்கும் என்ன உறவு?
 
 
புதினம் இணைய தளம் [ சிறப்புச் செய்தியாளர் ] [ சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012, 01:19 GMT ] அன்று `தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மதியுரை வழங்கும் நிறுவனத்தினுள் சிறிலங்கா புலனாய்வு அதிகாரி ஊடுருவல்` என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

பார்க்க புதினப்பலகை http://www.puthinappalakai.com/view.php?20120922107023. அத் தலைப்பே கூறுகிறவாறு சிறிலங்கா புலனாய்வு அதிகாரியின் ஊடுருவல்தான் அச்செய்தியில் முதன்மைப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அந்நிறுவனம் எப்படி ஊடுருவியது?
 
புதினப்பலகையின் படி;
1)  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூலோபாய உத்திகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்காக, அண்மையில் Verite Research என்ற மதியுரை நிறுவனம் வாடகைக்கு அமர்த்தப்பட்டது.
 
2) வெளிநாட்டு இராஜதந்திரப் பின்னணியுடனேயே, இந்த மதியுரை நிறுவனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணிக்கு அமர்த்தியிருந்தது.

இந்த Verite Research என்ற மதியுரை நிறுவனத்தின் இணையதள முகவரி   http://www.veriteresearch.org/ ஆகும்.அதில் இந்நிறுவனம் இலங்கையில் பத்திரிகைகளை `ஆய்வு` செய்து அறிக்கைகள் வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
The Research Practice of Verité Research conducts research and analysis for a number of local and international partners.
 
Its clients include private sector firms, international organisations, Government institutions in Sri Lanka, leading Universities, and global research firms.
 
Recently it has completed research assignments commissioned by bodies including a leading university in the UK, one of the largest private sector employers in Sri Lanka, Sri Lankan government institutions and a leading micro finance network in Sri Lanka.
 
In the past, Verité Research has undertaken evaluations of local government legislation with The Asia Foundation, and its present work includes building statistics based decision algorithms to optimise budget allocations on daily online advertising.

இந்த அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என்ன ``மதியுரை`` வழங்குகின்றது? அது சரி இந்த ``மதியுரை`` என்பதுதான் என்ன?
 
மேலும் புதினப்பலகை கூறுகின்றது;
 
``தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட மதியுரை நிறுவனத்தினுள், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி சக்கி ஊடுருவியுள்ளது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.``
 
இந்தச் செய்தியின்படி சிங்கள ஊடுருவலை விடவும் பெரும் அதிர்ச்சிக்கு உரியது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கு மதியுரை வழங்க ஒரு அந்நிய நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்தி அதன் வழிகாட்டுதலில் இயங்குகின்றதா, பிரிகேடியர் றிஸ்வி சக்கி கூட ஊடுருவி உள்ளாரா? அல்லது `மதியுரை` அவர் மதியும் கலந்ததா?  இத்தகைய ஒரு கும்பல்தான் தன்னைத் `தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு` என்று வேறு அழைத்துக்கொள்கிறதா  என்பதுதான். இந்தக் கேள்விகளை எழுப்புவதற்கு மதி நுட்பம் தேவையில்லை மதி கெடாமல் இருந்தாலே போதும்!
 
அவ்வாறிருக்கும் தமிழர்களுக்கு கூட்டமைப்பு விளக்கமளிக்க வேண்டும்.
 
Verite Research நிறுவனத்துக்கும் கூட்டமைப்புக்கும் என்ன உறவு?
ENB Admin
=================


புதினப்பலகைச் செய்தி:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மதியுரை வழங்கும் நிறுவனத்தினுள் சிறிலங்கா புலனாய்வு அதிகாரி ஊடுருவல்

புதினம் இணைய தளம்[சிறப்புச் செய்தியாளர்] [சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012, 01:19 GMT]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட மதியுரை நிறுவனத்தினுள், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி சக்கி ஊடுருவியுள்ளது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூலோபாய உத்திகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்காக, அண்மையில் Verite Research என்ற மதியுரை நிறுவனம் வாடகைக்கு அமர்த்தப்பட்டது.
 
வெளிநாட்டு இராஜதந்திரப் பின்னணியுடனேயே, இந்த மதியுரை நிறுவனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணிக்கு அமர்த்தியிருந்தது.
 
இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாட்டை செய்து கொண்ட பின்னர், குறிப்பிட்ட நிறுவனம் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் றிஸ்வி சக்கியை பணிக்கு அமர்த்தியுள்ளது.
 
பிரிகேடியர் றிஸ்வி சக்கி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதில் தீவிரமாகப் பங்கெடுத்த ஒருவராவார்.
இவர் 1990களில் கிழக்கில் இடம்பெற்ற தமிழர்களின் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவராக இருந்தவர்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிலும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரியாகச் செயற்பட்ட பிரிகேடியர் றிஸ்வி சக்கி, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிக்கப்பட்டவர்களின் கொலைகள், கடத்தல்களுக்குப் பொறுப்பாக இருந்தவராவார்.
 
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இவர், இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பாகிஸ்தானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் படுகொலைகள் மற்றும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதில் தீவிரமாகப் பங்கெடுத்த பிரிகேடியர் சக்கியை, குறிப்பிட்ட மதியுரை நிறுவனம் பணிக்கு அமர்த்தியுள்ளது, சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், இந்த மதியுரை நிறுவனத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்பாடு செய்து கொள்வதில் பின்புலத்தில் இருந்த வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை பாகிஸ்தானுடன் நெருக்கமான பிரிகேடியர் சக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மதியுரை வழங்கும் நிறுவனத்தினுள் ஊடுருவியிருப்பது இந்தியாவுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...