Saturday 25 August 2012

இலங்கையில் என்றுமில்லாத வரட்சி.

 

* கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர்த் தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் அங்கு ஒரு லீற்றர் நீர் ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
*மன்னார் மாவட்டத்தின்  கட்டுக்கரைக்குளம் நீரின்றி வரண்டிருக்கின்றது. இதனால் அதன் கீழுள்ள  648 குளங்களும் வற்றிக்கிடக்கின்றன.
* இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் வரட்சியினால் 150,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
 * கொத்மல, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைப் பெறும் விவசாய நிலங்களும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
* பொலன்னறுவயில் 7500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கைவிடப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரம் ஏக்கர் நெல், 50 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர்களும் அழியும் ஆபத்தில் உள்ளன.
* மழை பெய்யாது போனால் நீர் மின்உற்பத்தி முற்றாக தடைப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Sri Lanka's devastating drought hits paddy fields
21 August 2012
Sri Lanka are being devastated by a drought which farmers say is the worst they can remember.
Rice paddy fields dependent on irrigation have been severely affected, as have the livelihoods of fishermen.
The government is discussing compensation measures but some villagers are blaming officials for poor water management.
The BBC's Charles Haviland reports from Colombo.


Get Adobe Flash player


கிளிநொச்சியில் கடும் வரட்சி! ஒரு லீற்றர் தண்ணீர் ஒரு ரூபாய்க்கு விற்பனை
August 21, 2012 யாழ்ப்பாணம்

இலங்கையின் கிளிநொச்சி பிரதேசத்தில் நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த்தேவைகளுக்காக பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.

குளங்களின் நீர் மட்டமும் என்றுமில்லாத வகையில் குறைவடைந்துள்ள நிலையில் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையால் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நீரினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நீண்ட தூரங்களுக்கு அலைந்து திரியும் அவலம் நாளாந்தம் இடம்பெற்றுவருகிறது.

குறிப்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர்த் தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் அங்கு ஒரு லீற்றர் நீர் ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது மக்கள் தங்களது அன்றாட அனைத்து நீர்த்தேவை களுக்காகவும் நீரினை பணம் கொடுத்தே பெற்று வருகின்றனர்.

பூநகரி பிரதேச சபையினரும் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அது எல்லா பிரதேசங்களையும் சென்றடையவில்லை என்பதோடு மக்களின் எல்லாத் தேவைகளுக்கும் போதுமானதாகவும் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க முழங்காவில் பிரதேசத்திலும் மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில் முழங்காவில் பிரதேசத்தில் உள்ள ஒரு குழாய் கிணற்றிலிருந்து கடற்படையினர் நாளாந்தம் பாரிய நீர்த்தாங்கிகள் மூலம், இலட்சக்கணக்கான நீரை முழங்காவில் பிரதேசத்திற்கு அருகில் உள்ள பிரதான கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்கின்றனர்.



இந்த குழாய் கிணற்றிலிருந்து இராணுவத்தினரால் பெறப்படும் நீர் நாளாந்தம் இராணுவத்தின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை முகாமிலுள்ள நீச்சல் தடாகத்தினை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலத்தடி நீர் விரைவாக குறைவடைவதால் கடல் நீர் உள்வரும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகிறது.

முழங்காவில் பிரதேசத்தினை சுற்றியுள்ள பிரதேசங்களின் நீர் நிலைகள் இவ்வாறு உவர் நீராக மாறியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றி தவிக்கும் நிலையில் குளிப்பதற்கு நாளாந்தம் பெருமளவு நீர் எடுத்துச்செல்லப்படுவது நியாயமற்ற செயலாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.

இலங்கையில் கடும் வரட்சி -அழிவின் விளிம்பில் பயிர்கள்!
 [ 2012-06-26]

பருவமழை தாமதமாவதால் இலங்கையில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளதால், விவசாயம், நீர் மின்உற்பத்தி என்பன கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதையடுத்து மகிந்த ராஜபக்ச நேற்று அலரி மாளிகையில், அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.இந்தக் கூட்டத்தில் அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் திறைசேரி செயலர் ஆகியோரும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் வரட்சியினால் 150,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொத்மல, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைப் பெறும் விவசாய நிலங்களும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

சிறிய குளங்கள், நீர்த்தேக்கங்கள் முற்றாக வற்றி வறண்டு போயுள்ளன.பாரிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.பொலன்னறுவில் 7500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கைவிடப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரம் ஏக்கர் நெல், 50 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர்களும் அழியும் ஆபத்தில் உள்ளன.

இதற்கிடையே, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.மழை பெய்யாது போனால் நீர் மின்உற்பத்தி முற்றாக தடைப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.நிலைமையை சமாளிக்க அனல் மின் உற்பத்தி மூலமே மின்சாரத் தேவை ஈடுசெய்யப்படுகிறது.

இதனால் விரைவில் கடுமையான மின்வெட்டு, நீர்வெட்டு என்பன நடைமுறைக்கு வரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட-இலங்கை வறட்சியால் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிப்பு
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 ஆகஸ்ட், 2012 - 15:52 ஜிஎம்டி
 

வட இலங்கையில் ஒருபோதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீருக்காக தூர இடங்களுக்கு அலைய நேரிட்டிருக்கின்றது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் பவுசர் வண்டிகள் மூலம் தண்ணீர் விநியோகம் மேற்கொண்டு வருகின்றது.

இருப்பினும் போதிய அளவு நீரைப் பெற முடியாதிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றார்கள்.

வன்னியில் மல்லாவி போன்ற கிராமிய-நகரப் பகுதிகளிலும் தண்ணீருக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் பணம் செலவழித்து தூர இடங்களில் இருந்து தண்ணீரைப் பெற வேண்டியிருப்பதாகவும் அங்குள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

'பவுசர் மூலம் குடிநீர் விநியோகிப்பதிலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிரமம்'

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் வரட்சியினால் கிணறுகள் வற்றியிருப்பதுடன் பல கிணறுகள் உப்பு நீராகியிருப்பதனால் அங்கு நிலைமை மோசமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது.

அதிகாரிகள் பவுசர் வண்டி மூலமாக அங்கு நீர் விநியோகம் செய்து வருகின்ற போதிலும் நிலைமை சிரமமாக இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளும் மீனவர்களும் கவலை

மன்னார் மாவட்டத்தின் பெரிய குளமான கட்டுக்கரைக்குளம் நீரின்றி வரண்டிருக்கின்றது. இதனால் அதன் கீழுள்ள பெரும் எண்ணிக்கையான குளங்களும் வற்றிக்கிடக்கின்றன.

1400 ஏக்கர் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது. நன்னீர் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டிருப்பதனால் பல குடும்பங்கள் வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் மொகமட் ரியாஸ் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வரட்சி நிவாரண நடவடிக்கைகளுக்கென 39 லட்சம் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிதியைப் பயன்படுத்தி வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் மன்னார் மாவட்டத்தின் இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சுகுணதாஸ் கூறுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள துணுக்காய் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் செல்லையா அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...