Monday 18 June 2012

ஆயர் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை- ஐ.தே.க.பா.உ


ஆயர் ஒருபோதும் தனிநாடு கோரவுமில்லை. ஆயுதப் போராட்டத்தை மீளப் புதுப்பிக்க எண்ணவும் இல்லை:
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன


மன்னார் ஆயருக்கு எதிரான அச்சுறுத்தல் :வத்திக்கான் பாப்பரசரக்கு கடிதம் எழுதிய ஜயலத்

[ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 12:17.35 PM GMT ]

மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் அடிகளாருக்கு ௭திராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் வத்திக்கானில் உள்ள பாப்பரசர் பெனடிக் அவர்கள் தலையீடு செய்ய வேண்டும்.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன அவருக்கு கடிதம் மூலம் மன்னார் ஆயருக்காக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:–

பேரினவாத அதிகார போக்கைக் கொண்ட இலங்கை அமைச்சர்களால் விடுக்கப்பட்டுள்ள விமர்சனங்களாலும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விமர்சனங்களாலும் ஆயர் கடும் மன அழுத்தத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மறை மாவட்ட ஆயர் அரசுக்கு ௭திராக செயற்பட்டதாகவும், தமிழ் – முஸ்லிம் உறவைக் குழப்பும் நோக்கில் செயற்பட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவற்றுக்கு புறம்பாக சுமார் 16 மாதங்களுக்கு முன்னர் ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளால் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த விடயம் தொடர்பாகவும், ஆயரால் ஜனாதிபதிக்கும், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் ௭ழுதப்பட்ட கடிதம் தொடர்பாகவும் கடந்த மாதம் புலனாய்வு அதிகாரிகளால் ஆயர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆயர் ஒருபோதும் தனிநாடு கோரவுமில்லை. ஆயுதப் போராட்டத்தை மீளவும் புதுப்பிக்கவும் இல்லை. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்காகவும், தமிழ் பேசும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர். அதேபோல் சிங்கள மக்களுக்காகவும் குரல் கொடுப்பவர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கு தனிநாட்டு கோரிக்கையோ ஆயுதப் போராட்டமோ தீர்வாக அமையாது ௭ன்பதையே அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இப்படியான ஒரு மதத்தலைவருக்கு ௭திராகவே இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட ஆயர் ௭ந்தவித இடையூறுகளும் இன்றியும், பாதுகாப்புடனும் தனது பணியைத் தொடரவும் அதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கும் பாப்பரசர் தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் ௭னவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tamil Win
====
Mannar Bishop never called for a separate country or renewed armed struggle – Dr. JJ
 June 16, 2012, 7:33 pm The Island


Senior UNP parliamentarian, Dr. Jayalath Jayawardena has appealed to His Holiness Pope Benedict the XVI to use his good offices to dialogue with the Sri Lankan Government to ensure that the Bishop of Mannar continues his mission without threats, intimidations and false allegations.

In a letter to the Pope, the MP says: "Since the beginning of 2012, adverse comments about the Bishop by some chauvinistic and communal minded Government Ministers, and media owned, controlled and sympathetic to the Government have intensified. Meaningless accusations were made that the Bishop aspires to be the Cardinal of "Tamil Eelam", that he is involved in a conspiracy against the government supported by the INGOs and that he is disturbing Muslim – Tamil harmony. Government Ministers claimed that he should be arrested and prosecuted over a letter he wrote to the President and members of the UN Human Rights Council (together with 30 other Tamil Catholic Clergy from the North, later endorsed by 63 more including a retired Sinhalese Anglican Bishop, Catholic and other Christian Clergy and lay people, men and women, non-Christians and both Tamils and Sinhalese)".

"More than 16 months after a detailed submission to the Presidential Commission of Inquiry (LLRC), he was questioned by government intelligence officers last month. The Bishop was also part of a group of Tamil civil society members who engaged with the Tamil National Alliance (the major political party representing the Tamils of the North and East) on issues that they considered being critical to Tamil people.

"Through above and various other public and private interventions, the Bishop had called for recognition of the Tamil nationhood and political solution to the ethnic conflict, a process of truth telling about abuses that had happened in the last stages of the war and throughout the conflict, return of land forcibly and illegally occupied by the military to people, support for the return of Northern Muslims evicted from the North in 1990 by the LTTE on a level equal to support extended to Tamils, concerns about those extrajudicial executed, disappeared and seriously injured during the war, those detained for long periods and several post war concerns such as militarization and cultural domination of Tamil areas.

"The Bishop had also condemned attacks on journalists and human rights defenders in the south including the killing of a Sinhalese fishermen during a protest against fuel price hikes. His submission to the LLRC included a question about the fate of 146,679 people that appear to be unaccounted for in the Vanni in the last 8 months of the war, based on Government statistics and relevant documentary evidence from Government sources was submitted to the LLRC along with the submission.

"The Bishop had never called for a separate country or renewed armed struggle and has rejected both these as not being viable options to be considered in the struggle for dignity and justice of Tamil people and broader reconciliation in Sri Lanka.

"He had also been cooperating and engaging with national and local level government officials, including the President, Ministers, The Secretary to the Ministry of Defense, Government Agent of Mannar, Military officials and Police. He readily agreed to the request for questioning by the government intelligence officers and was instrumental in taking the initiative to invite the LLRC to conduct hearings in Mannar. He had also cooperated and engaged with the international community, especially inter-governmental bodies, experts and staff of the United Nations, of which Sri Lanka is a member.

"Threats and intimidation of the Bishop has also brought about more fear into the minds of many other religious leaders and civil activists in the Mannar District and the North, who had long regarded the Bishop as one of the most prominent spokespersons on matters of social justice, human rights, peace and reconciliation".

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...