Monday 16 April 2012

பயங்கரவாதி `சாரூக்கான்``!

இந்தியப் பிரபல்யம் சாரூக்கான் அமெரிக்க விமான நிலையத்தில் 2 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை!
நியூயார்க்: பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானிடம் நியூயார்க் விமான நிலையத்தில் பாதுகாப்பு
என்ற பெயரில் அமெரிக்க குடியேற்ற துறை அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதனால் அவர் செல்ல வேண்டிய நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், அமெரிக்க அதிகாரிகளின் இந்த அதிகாரத் தோரணையை தான் அமெரிக்காவுக்கு வரும்போதெல்லாம் பார்க்க முடிகிறது ; தன்னைப்பற்றி கவுரவம் கொண்டால் அமெரிக்கா தான் வர‌ வேண்டும் . உயரம் என்ன, நிறம் என்ன என்று கேள்விகள் ‌கேட்டு படுத்தி விட்டனர் என நிகழ்ச்சியி்ல் பேசுகையில் குறிப்பிட்டார்.

நியூயார்க் யேல் பல்கலை.,யில் முகேஷ் அம்பானியின் மகள் படித்து வருகிறார். இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஷாரூக்கான் , மற்றும் அம்பானியின் மனைவி நீடா அம்பானி சென்றனர். நியூயார்க் சென்ற விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் வழக்கமான பல்கட்ட சோதனைகள் நடக்கும்.

இந்த சோதனையில் , ஷாரூக்கான் என்ற பெயரை கேட்டதும், கூடுதல் விசாரணைக்குப்படுத்த அமெரிக்க அதிகாரிகள் முன் வந்தனர். ஷாரூக்கானை விமான நிலையத்திலலேயே நிறுத்தி வைத்தனர். குடியேற்றதுறை , பாதுகாப்பு மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பலகட்டமாக துருவி.
துருவி கேள்வி எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை ஓடியது. நிகழ்ச்சிக்கு வராத ஷாரூக்கான் நிலை குறித்து யாலே பல்கலை., நிர்வாகிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்ட போது இவ்வாறு விசாரணை நடப்பது தெரியவந்தது.

ஷாரூக்கானிடம் இது போன்று அமெரிக்காவில் விசாரணை நடத்தப்படுவது 3 வது முறை. கடந்த சில மாதங்களுக்கு அமெரிக்கா சென்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டார். இது பார்லி.,யில் நமது எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம்: ஷாரூக்கானிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.,கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க தூதர் நிருபமாராவிடம் விசாரிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளேன் என்றார். இதற்கிடையில் இந்த
சம்பவத்திற்கு ‌அமெரிக்கா வருத்தம் தெரிவித்து இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றன.

நன்றி தினமலர்

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...