Thursday 12 April 2012

பிரித்தானிய எம்.பி – யாழ். ஆயர் சந்திப்பு.

பிரித்தானிய எம்.பி – யாழ். ஆயர் சந்திப்பு.தமிழ் மிரர் செவ்வாய்க்கிழமை, 03 ஏப்ரல் 2012 15:03


``எல்லா மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான நல்லாட்சியை இலங்கை அரசு ஏற்படுத்துவதே பிரித்தானியாவின் விரும்பம்``பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெசபி

`` நான் ஒரு அரசியல்வாதி அல்ல, தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வு முக்கியம்`` 
யாழ். ஆயர் தோமஸ் சௌவுந்தர நாயகம்

எல்லா மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான நல்லாட்சியை இலங்கை அரசு ஏற்படுத்துவதே பிரித்தானியாவின் விரும்பம் என இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெசபி யாழில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இவர், யாழ். ஆயர் இல்லத்தில் இன்று செவ்வாய்கிழமை யாழ். ஆயர் தோமஸ் சௌவுந்தர நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

இச்சந்திப்பில் ஆராயப்பட்ட விடையங்கள் தொடர்பாக யாழ். ஆயர் தோமஸ் சௌவுந்தர நாயகம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

"இலங்கைக்கு பலமுறை வந்து சென்றுள்ளதாகவும் இங்கு பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு மக்களுடைய வாழ்க்கையில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது தொடர்பாக தம்மிடம் கேட்டார்.

இன்னமும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை எனவும் இலங்கை அரசு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அழுல்படுத்தி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

அரசியல் தீர்வில் தமிழ் மக்கள் எவ்விதமான அரசியல் தீர்வை எதிர்பார்கின்றார்கள் என தன்னிடம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், நான் ஒரு அரசியல்வாதி அல்ல என்றும் தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வு முக்கியம் என்று சுட்டிக்காட்டினேன்" என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழிலுள்ள இளைய தலைமுறையினருக்கு ஆங்கில அறிவு முக்கியமானதாக இருக்கிறது. இதனால் பிரித்தானியா இதற்கு உதவி செய்ய வேண்டும் என தான் அவரிடம் கேட்டுக்கொண்டதாக யாழ். ஆயர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் லோட் நெசபின் பாரியாருமான சலோட் நெசபி கலந்துகொண்டார்.
 

No comments:

Post a Comment

Why are foreign envoys making a beeline to the JVP?

  T he JVP misread the invite as the Indians had acknowledged that the party would be the next government in waiting and Anura Kumara, the p...