Monday 9 April 2012

ஜெயா அரசின் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெறவுள்ள ம.ஜ.இ.கழகத்தின் ஆர்ப்பாட்டம்

ஜெயா அரசின் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெறவுள்ள ம.ஜ.இ.கழகத்தின் ஆர்ப்பாட்டம்


தனியார்மய,தாராளமய,உலகமய பொருளாதாரக் கொள்கைகளுக்குச் சேவகம் செய்யும் பொருட்டு, பன்னாட்டு பகாசுரக் கம்பனிகளின் முதலீட்டுக்கு தமிழக மின்சாரத்துறையை திறந்துவிடவேண்டி, திட்டமிட்டு தட்டுப்பாட்டை உருவாக்க கொடுங்கோல் ஜெயா அரசு முயல்கின்றது. இதன் விளைவே மின்சாரக் கட்டண உயர்வாகும்.கட்டண உயர்வும், தட்டுபாடும் மத்திய தர, மற்றும் சிறு தொழில்கள் நலிவடையவும்,விவசாயம் பாசனமின்றி பாழடைந்து பாலைவனமாகவும்,இதனால் உழைக்கும் மக்கள் தற்கொலைச்சாவை நாடவும் வழி வகுக்கின்றது.இதனால் உழைக்கும் மக்களின் விமோசனத்துக்கும் விடுதலைக்கும்,கொடுங்கோல் ஜெயா அரசின், இக் கொலைகாரக் கொள்கையை தடுத்து நிறுத்தப் போராடுவது அவசர அவசிய ஜனநாயகக் கடமையாக உள்ளது.இதை உணர்ந்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.


இம்மாதம் வெள்ளிக்கிழமை 20-04-2012 அன்று மாலை 5.00 மணிக்கு  செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெறவுள்ளது.தோழர் டேவிட் செல்லப்பாவின் தலைமையில், ``கொடுங்கோல் ஜெயா அரசே! மின்சாரக் கட்டண உயர்வை உடனே திரும்பப்பெறு!,
ஆட்சிக்கு வந்தபின் மக்கள் மீது ஏற்றிய சுமைகள் அனைத்தையும் இறக்கு!`` என்ற முழக்கங்களை விளக்கி தோழர் மனோகரன் கண்டன உரை நிகழ்த்துவார், தோழர் கார்த்திகேயன் நன்றியுரை செலுத்துவார்.


இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து போராட முன்வருமாறு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், வெகு ஜனங்களைக் கோரியுள்ளது.

கூடுவோம்! கொடுங்கோல் ஜெயா ஆட்சியைச் சாடுவோம்!! வாடும் பயிர்கள் வாழ போராடுவோம்!!!
http://samaran1917.blogspot.com/2012/04/blog-post.html

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...