Thursday 29 December 2011

சதாம் ஹுஸைன் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் எனப் பெயர் மாற்றம் செய்ய ஏறாவூர் மக்கள் மறுப்பு

சதாம் ஹுஸைன் கிராமத்தின் பெயர் மாற்றம் தொடர்பில் ஈராக் தூதுவராலயம் அறிக்கை

வீரகேசரி இணையம் 12/28/2011 11:24:15 AM 5

மட்டக்களப்பு ஏறாவூர், சதாம் ஹுஸைன் கிராமத்தின் பெயர் மாற்றம் தொடர்பில் எவ்வித தலையீடுகளையும் நாம் மேற்கொள்ளவில்லை என கொழும்பிலுள்ள ஈராக் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹா ஹலப் தெரிவித்துள்ளதாவது,

சதாம் ஹுஸைன் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என பெயர் மாற்றி சதாம் ஹுஸைன் கிராமத்திற்கு ஈராக் மக்களினால் வழங்கப்படும் உதவிகளை தங்களினால் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக ஏறாவூர் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள் குறித்த கிராமத்தின் பெயர் மாற்றம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளையும் வாதப் பிரதிவாதங்களையும் உருவாக்குகின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த சதாம் ஹுஸைன் கிராமத்திற்கு ஈராக் மக்கள் மற்றும் அரசாங்கம் தொடர்ந்து உதவித் திட்டங்களை வழங்குவார்கள் எனக்குறிப்பிட்ட இலங்கைக்கான ஈராக் தூதுவர், 1982 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி பொதுமக்களிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்ட இந்தக் கிராமம் ஈராக் மக்களின் நிதியுதவியினால் அமைக்கப்பட்டதே தவிர, முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் நிதியினால் அமைக்கப்படவில்லை.மாறாக அவர் ஜனாதிபதியாக இருக்கும் காலப்பகுதியிலேயே அமைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் ஈராக் மக்கள் இந்தக் கிராமத்திற்கு பல உதவிகளை வழங்கியது போன்று தொடர்ந்தும் உதவிகளை வழங்குவர்.

மேற்படி கிராமத்திற்கு ஈராக் மக்களால் வழங்கப்பட்ட 75 துவிச்சக்கர வண்டிகள், சுயதொழில் புரிவோருக்கான 45 தையல் இயந்திரங்கள் மற்றும் பள்ளிவாசலைப் புனரமைப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபா பணம் உள்ளிட்ட பல உதவிகள் கடந்த வாரம் வழங்கப்பட்டன.

சதாம் ஹுஸைன் கிராமத்தின் பெயரை மாற்றக்கூடாது என கிழக்கு மாகாண அமைச்சரவை கடந்த புதன்கிழமை தீர்மானம் எடுத்தமைக்கு அமைவாக கிராமத்தின் பெயர் மாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...