Wednesday 30 November 2011

சம்மாந்துறை மஜீத் காலமானார்!

தமிழ், முஸ்லீம் மக்களின் மதிப்பை பெற்ற சம்மாந்துறை மஜீத் காலமானார்!


[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 10:38.15 AM GMT ]

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்ற அரசியல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் சம்மாந்துறை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்மாந்துறை மஜீத் என கிழக்கு மாகாண மக்களால் அழைக்கப்படும் எம்.ஏ.அப்துல் மஜீத் இன்று இரவு சம்மாந்துறையில் காலமானார்.1960ஆம் ஆண்டிலிருந்து 1994ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும், பிரதி தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சராகவும், பின்னர் புடவைக்கைத்தொழில் அமைச்சராகவும் பணியாற்றினார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதில் பெரும் பங்காற்றிய மஜீத் தமிழ் மக்களுடன் நெருங்கிய உறவை பேணிவந்தார். அம்பாறை மாவட்டத்தின் முதல் பட்டதாரியான இவர் சம்மாந்துறை தொகுதியில் யாராலும் தோற்கடிக்க முடியாத அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தார்.

மிகுந்த நேர்மையும், அடிமட்ட மக்கள் தொடக்கம் அனைவருடனும் அன்புடன் பழகும் பண்பைக்கொண்ட மஜீத் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் மக்களிடையே மோதல்களும் பிரிவினைகளும் ஏற்பட்ட வேளையில் மனம் நொந்தவராக காணப்பட்டார்.

சம்மாந்துறை மஜீத்தின் ஜனாஸாவுக்கு பெருந்தொகையான மக்கள் அஞ்சலி!

அன்னாரின் ஜனாஸா நாளை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை அடக்கம் செய்யப்படும்.

நேற்றிரவு காலமான சம்மாந்துறைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எ.அப்துல் மஜீட்டின் ஜனாசா இன்று சம்மாந்துறை நகரசபை அப்துல் மஜீட் மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஜனாசாவிற்கு பெருந்தொகையான தமிழ் முஸ்லீம் மக்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் எ.ஆர்.எம்.மன்சூர் கிழக்கு மாகாண சபை அமைச்சர் உதுமாலெவ்வை உறுப்பினர் மஜீட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அன்னாருக்கு அஞ்சலி செலுத்துமுகமாக சம்மாந்துறையிலுள்ள கடைகள் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்தும் இன்று பூட்டப்பட்டிருந்தன. ஜனாஸா இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Why are foreign envoys making a beeline to the JVP?

  T he JVP misread the invite as the Indians had acknowledged that the party would be the next government in waiting and Anura Kumara, the p...