Monday 28 March 2011

லிபியா மீதான யுத்தத்தைக் கண்டிக்கும் சிங்கள சமூக தேசிய வெறியர்கள்


லிபியா மீதான தாக்குதல்களை கண்டித்து ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

பதிவு Mar 24, 2011 / பகுதி: சிறப்புச் செய்தி /

லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களை கண்டித்து இன்று கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லிபியா மீதான தாக்குதல் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,

லிபியாவில் நடைபெற்ற போராட்டங்கள் ஆனது உள்நாட்டு விடயமாகும். உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள லிபியாவின் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்குமே உரிமையுள்ளது. எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ கிடையாது.



ஆனால், ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனுமதியுடன் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பலவந்தமாக தலையிட்டு லிபியா மீது விமானம் மூலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கிற்கு நடந்த நிலையே இன்று லிபியாவிற்கும் நடைபெறுகின்றது. லிபியாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து மேற்குலக நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.


தாக்குதல்கள் நடத்துவதற்கு அனுமதியளித்து பான் கீ மூனும் போர்க்குற்றவாளியாகியுள்ளார். ஏனைய நாடுகளில் போர் குற்றங்களைத் தேடும் ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இன்று லிபியாவில் பாரிய போர் குற்றங்களை வெளிப்படையாக செய்து வருகின்றன. படைகளைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க இது ஒன்றும் 19ஆம் நூற்றாண்டு அல்ல.

எனவே,லிபியா மீதான தாக்குதலை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது எனக் கூறினார்.

குறிப்பு:

லிபியாவுக்கு எதிரான யுத்தத்தை கண்டிப்பதாக இது தோற்றமளித்தாலும், ஈழதேசத்தில் சிறீலங்கா நடத்திய இனப்படுகொலையையும், யுத்தக்குற்றங்களையும் நியாயப்படுத்துவதே கெளரவ அமைச்சர் விமல் வீரவன்சவின் குறிக்கோள் என்பது தெளிவாகின்றது.’’எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ கிடையாது.’’ உண்மைதான் அமைச்சரே கூடவே ஒரு தேசத்தின் சுயநிர்ணயத்தில் தலையிடுவதற்கும் எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ உரிமை கிடையாது என்பதையும் சேர்த்துச் சொல்லவிடாமல் தங்களைத் தடுப்பது என்ன? முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களைப் படுகொலை செய்த இறையாண்மையுள்ள சிறீலங்கா அரசு, ஒரு களங்கமாக தங்கள் கண்களுக்கு தெரியாதது ஏன்? சிங்களப் பெருந்தேசிய வெறிதானே!!
’’லிபியாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து மேற்குலக நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன’’.உண்மைதான் இதில் தங்களுக்கு என்ன கவலை? தங்கள் நாட்டில் எந்தவளங்களை மேற்குலக நாடுகளுக்கு- கூடவே கிழக்குலக நாடுகளுக்கும் பங்கிட்டு! - தாரைவார்க்காமல் பாதுகாத்து வைத்திருக்கின்றீர்கள் ஒரு உதாரணம் காட்டமுடியுமா?
சொல்லில் சோசலிசமும்-ஏகாதிபத்திய எதிர்ப்பும்-, செயலில் சிங்களப் பெருந்தேசிய வெறிபிடித்தும் அலைகிற தங்களை ’சமூகதேசிய வெறியர்கள்’ என நாங்கள் அழைப்பதில் என்ன தவறு.சிங்கள மக்கள் தங்கள் தேசிய ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க சமூக தேசிய வெறியர்கள் தலைமை அளிக்க முடியாது என நாங்கள் சொல்வது எவ்வளவு சரியானது.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...