Thursday 5 August 2010

யாரென்று அடையாளம் தெரிகிறதா கே.பி கேள்வி?

நீங்கள் நல்லமாதிரியாக எதிர்காலத்தில் வாழவேண்டும். அது தான் என் கனவு அதற்காக ஒரு வருடம் வேலை செய்து வருகின்றேன்.எதிர்காலம் உங்கள் கையில்!அதற்குரிய காரியங்களைச் செய்து வருகின்றோம், சிலவேளை முன்னப் பின்ன நடக்கலாம் ஆனால் நடக்கும். நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பிக்கையை கை விடக்கூடாது.நான் சொல்லுறதுக்கு எதுவுமில்லை நான் நினைக்கின்றேன் என்னிலும் பார்க்க அவ தான் உங்கட எல்லாமே.அவவோட கதைச்சுக்கொள்ளுங்கோ என்னவேண்டுமெண்டாலும் அவ செய்யட்டும். அவ தேவையெண்டா எனக்குச் சொல்லட்டடும். ஐயோ ஆண்டவன் செய்த புண்ணியம் இப்படியொரு காட்சியை நான் கண்ணால் காணுவேன் என்று நினைக்கவேயில்லை.ஆகவே ஒன்றைப்பற்றியும் அதிகம் யோசிக்காதேங்கோ, எல்லாம் நல்ல படியாக நடக்கும்.சரியோ! நம்பிக்கை தான் வாழ்க்கை, நான் யார் என்று தெரியுமோ?!

==================================

யாரென்று அடையாளம் தெரிகிறதா கே.பி கேள்வி?
ஆம் என்று அரங்கத்துக்கு சொல்லிவிட்டு மனதுக்குச் சொன்னார்கள், கே.பி: கேடுகெட்ட பிறவி!
வீடியோ காட்சியில் கே.பி. வியாழக்கிழமை, 05 ஓகஸ்ட் 2010 23:12
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுத கொள்வனவாளருமான குமரன் பத்மநாதன் (கே.பி.) அரிதாகக் தோன்றும் வீடியோ காட்சியொன்று இணையத்தளங்களில் உலா வருகிறது.
கடந்த ஜுன் மாதம் வவுனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை அனோஜா வீரசிங்கவும் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றியுள்ளார்.
மேற்படி வீடியோவில் படையினர் மற்றும் ஏனைய அதிகாரிகள், புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் உட்பட தமிழ் இளைஞர்கள் மத்தியில் கே.பி. உரையாற்றுகிறார். அந்த வீடியோ காட்சியில், தான் யாரென்று அடையாளம் தெரிகிறதா எனக் கேட்கும் கே.பி., அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது எனவும் கூறுகிறார்.
தகவல்: தமிழ் மிரர்

இந்தக் காட்சியின் பின்னணியில் கே.பி.இலங்கை அரசின் கைதியென்று உருத்திரகுமாரன் சங்கதி(1) இணையத்துக்கு அளித்த பேட்டியில் சொன்னது பச்சைப் பொய்.உருத்திரகுமாரன் என்கிற யு.கே, கே.பி யை இவ்வாறு கடும் முயற்சி எடுத்துக் காப்பதற்கு காரணம் என்ன?

காரணம் மிகத் தெளிவானது;உருத்திரகுமாரனின் 'புலம்பெயர் தமிழீழ அரசாங்கமும்'', கே.பி.இன் ''புது வாழ்வுத் திட்டமும்'' ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே!

முள்ளிவாய்க்கால் மே18 2009 இற்குப் பின்னால், மீண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தலைதூக்கா வண்ணம் தடுக்க,உள்நாட்டில் கே.பி முயல்கின்றார், புலம் பெயர் நாடுகளில் யு.கே முயல்கின்றார்.கே.பி தூக்கியிருக்கும் வாள் உள்நாட்டு அமைதி வாதம், யு.கே.தூக்கியிருக்கும் வாள் சர்வதேச சட்டவாதம்.இரண்டுமே சீர்திருத்தவாதம்.இதனால் இரண்டுமே தேசிய சுதந்திரத்துக்கு எதிரான ஏகாபத்தியவாதம்.


முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் கைதான பல மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களை பக்ச பாசிஸ்டுக்கள் படுகொலை செய்து விட்டார்கள்.தகவல் தெரிந்தவரை பாலகுமார்,யோகி,புதுவை ஆகியோர் இதில் அடங்கியுள்ளனர்.


பாட்டுப்பாடிய புலவன் கைதான போது படுகொலை செய்த அரசு, ஆயுதம் கடத்தி ''கைதான'' அசுரனுக்கு ஆராதனை செய்வது ஏன்!?


கைது என்பது பொய்! காட்டிக்கொடுப்பு என்பதே மெய்!

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...