Friday 26 March 2010

குசினி நிர்வாகத்தில் குழப்பம் நஞ்சூட்டப்பட்டனர் குழந்தைகள்!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருட்டுச்சோலைமடு மாணவர்கள்
வீரகேசரி இணையம் 3/25/2010 7:06:27 PM
மட்டக்களப்பு வவுணத்தீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட இருட்டுச்சோலைமடு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 118 மாணவர்கள் அருந்திய உணவில் நச்சுத்தன்மை கலக்கப்பட்டதால்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

இருட்டுச்சோலை மடு விஷ்ணு வித்தியாலய மாணவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களாவர். பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவை உண்ட பின் அங்குள்ள கிணற்று நீரை இவர்கள் அருந்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வயிற்றுளைவு, வாந்தியால் அவதிப்பட்ட இவர்கள் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் அவசர வைத்திய சிகிச்சைக்குட்படுத்தப்பட்டதாக மட்டு. போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 12 - 15 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 118 மாணவர்களில் 112 பேர் இன்று காலை, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அறுவர் இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் டாக்டர் முருகானந்தம் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மட்டகளப்பு பொலிசார், மாணவர்கள் உண்ட உணவிலேயே நஞ்சு கலக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து சத்துணவு வழங்கிய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

உணவில் நஞ்சு? சிறார்கள் பாதிப்பு
உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில்
இலங்கையில் இருட்டுச்சோலைமடு அரசாங்க பாடசாலையின் உணவை உட்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பாடசாலை இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகருக்கு மேற்கே வவுனதீவு பிரதேசத்தில் இருக்கிறது.
பாடசாலையால் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட பின்னர் இந்தச் சிறார்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழோசையின் மட்டக்களப்புச் செய்தியாளர் கூறுகிறார்.
வாந்தி, மயக்கம் காரணமாக இந்தச் சிறார்கள் மட்டக்களப்பு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் டாக்டர் கே முருகானந்தம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு அல்லது அவர்கள் அருந்திய நீரில் நச்சுத்தன்மை கலந்திருக்கக் கூடும் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் டாக்டர் முருகானந்தம் கூறுகிறார்.

எனினும் சோதனைக்காக அனுப்பபட்டுள்ள நீர் மற்றும் உணவு குறித்த அறிக்கை கிடைத்த பிறகே இந்தச் சம்பவத்துக்கான உறுதியான காரணம் குறித்து தெளிவாகக் கூற முடியும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...