Saturday 30 January 2010

உளுத்துப் போன ஜனநாயகத்துக்கு புழுத்துப்போன சமூகத்தின் புகழாரம்

இலங்கையில் அமைதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தல் : அமெ. பிரதி ராஜாங்க செயலாளர்
வீரகேசரி இணையம் 1/28/2010 2:03:36 PM -

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை என அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் பிலிப் க்ரவுலி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் எமது அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
70சதவீதமானவர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளமை வரவேற்கத் தக்க விடயம். அதேவேளை, இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படவும் வேண்டும்.
சிறுசிறு சம்பவங்களைத் தவிர, தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது" என்றார்.


உத்தியோகபூர்வ முடிவுக்கு அமைவாக அரசியல் கட்சிகள் செயற்படவேண்டும் ஐ.நா.செயலாளர் நாயகம் வேண்டுகோள்
வன்முறைகள் சார்ந்ததாக இல்லாமல் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று முடிந்ததை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.அதேசமயம் உத்தியோகபூர்வமான முடிவுகளுக்கு

கீழ்ப்படிந்து செயற்படுமாறு பான் கீ மூன் இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஐ.நா. இணையத்தளம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது.
அதேவேளை,எந்தவொரு கவலைகள் தொடர்பான பிரச்சினைகளையும் சமாதான வழியில் முன்னெடுக்குமாறு பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார். நியூயோர்க்கிலுள்ள
ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பான் கீ மூன், தேர்தல் கடும் போட்டியாக இடம்பெற்றதை நான் உணர்கிறேன். பிரசார வேளையில் வன்
செயல்கள் இடம்பெற்றதையிட்டு நான் கவலையடைந்திருந்தேன்.வாக்களிப்பு அமைதியாக இடம்பெற்றதையிட்டு ஆறுதல் அடைகிறேன்.சில வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற போதும் ஒப்பீட்டளவில் வன்முறைகள் குறைவானதாக அமைதியாக தேர்தல் இடம்பெற்றுள்ளது என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.
அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக முடிவுகளை பிரகடனப்படுத்தியிருப்பது பற்றி குறிப்பிட்ட பான் கீ மூன், சட்ட ஒழுங்கு விதிகள் மற்றும் தேர்தல் ரீதியான ஏதாவது கவலைகளுக்கு
தீர்வுகாணும் விடயங்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமான தீர்மானத்திற்கு அமைவாக செயற்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
நாட்டின் நலனுக்காக சகல தரப்பினரும் பொறுமை,பொறுப்புணர்வுடன் செயற்படும் அறிவுஞானத்தை பார்ப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம் என்று நான் எதிர்பார்க்கிறேன்.இது தேசிய சௌஜன்யத்துக்கும் எதிர் காலத் தேர்தல்களுக்கும் இடமளிக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்க மக்கள் விரும்புவதை வாக்களிப்பு எடுத்துக்காட்டுகிறது -ஐரோப்பிய ஒன்றியம்

வீரகேசரி நாளேடு 1/30/2010 10:49:14 AM -

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தொகையான மக்கள் வாக்களித்துள்ளமை குறித்து பெருமிதமடைவதாக குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மக்கள் ஜனநாயக நடைமுறைகளில் முழுமையாக கலந்து கொள்ள பேரார்வம் கொண்டுள்ளார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றதை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும் துணைத் தலைவியுமான பெரோனஸ் கதறீன் அஷ்ரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல வருடங்களின் பின்னர் இத்தகையதோர் தேர்தல் முதல் தடவையாக பாரதூரமான அசம்பாவிதங்களின்றிறி நடந்தேறியதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கின்றது.
பெரும் தொகையான மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளமை அவர்கள் ஜனநாயக நடைமுறைகளில் முழுமையாக பங்கேற்க விரும்புகிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து பாராட்டுத் தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் சகல மக்களுக்கும் நிலையான சமாதானத்தை கொண்டுவருவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கும் அவர் எடுக்கும் தீவிர முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது இடம்பெற்ற குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் குறித்து இந்த அறிக்கையில் கவலை தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேர்தல் கண்காணிப்பாளர்களாலும் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினாலும் தெரிவிக்கப்பட்ட ஒழுங்கீனங்கள் பற்றி உரிய முறையில் விசாரணை நடத்துவதுடன் சகல வேட்பாளர்களினதும் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்தவுக்கு மன்மோகன்சிங் வாழ்த்து
வீரகேசரி நாளேடு 1/29/2010 10:43:33 AM -

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மன்மோகன்சிங், உங்கள் தலைமையில் இலங்கையில் பூரண அமைதி ஏற்பட்டு அனைத்து சமூகத்தினரும் இணக்கத்துடனும், மரியாதையுடனும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உல்லாச புரியாகும் மைய மலையகமும், Spain இல் உல்லாசத் துறை எதிர்ப்பும்.

Thousands protest in Spain's Canary Islands over mass tourism By  Borja Suarez    April 21, 2024   SANTA CRUZ DE TENERIFE, Spain, April ...