Friday 6 November 2009

400 ஏக்கர் தமிழ் விவசாயிகளின் நிலம் சிங்களவர்களால் அபகரிப்பு

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லையில் 400 ஏக்கர் தமிழ் விவசாயிகளின் நிலம் சிங்களவர்களால் அபகரிப்பு
தமிழர்களின் நிலங்களில் அத்துமீறிய வேளாண்மைச் செய்கையை நிறுத்தவும் : துரைத்தினம் (துரைரத்தினம்)
வீரகேசரி இணையம் 11/3/2009 3:14:25 PM
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடுவில் தமிழர்களுக்குச் சொந்தமான வயல் நிலங்களில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்மைச் செய்கையைத் தடை செய்யுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் ((துரைரத்தினம்) மாகாண முதலமைச்சரைக் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

1990 ஆம் ஆண்டு முதல் இக்கிராமத்திலிருந்த தமிழ் குடும்பங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாகவும், இவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முதலமைச்சர், அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இது தொடர்பாக அங்கு நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி விவசாயிகள் முதற்கட்டமாக தங்கள் காணிகளைப் பார்வையிட நேற்று சென்றிருந்தனர். அப்போது 8 பேருக்குரிய 31 ஏக்கர் வயல் நிலத்தில் பெரும்பான்மை இனத்தவர்களினால் அத்துமீறி விவசாயச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த காணிகளில் விதைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த உரியவர்கள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, தமிழர்களுக்கு சொந்தமான 300 முதல் 400 ஏக்கர் வயல் காணிகளில் உரியவர்கள் விவசாயம் செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுத்து அதற்கான தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்" என்றும் அக்கடிதத்தில் மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை அவர் கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...