Friday 2 October 2009

காஞ்சிவரம் ஒரு கற்பூரவாசனை

''என் வாழ்நாளின் கனவும்,சாதனையும்தான் காஞ்சிவரம் என்றும் இது வியாபாரத்திற்காக எடுக்கப்பட்ட படம் அல்ல என் ஆத்ம திருப்திக்காக எடுக்கப்பட்ட படம் என்று சொன்னார் இயக்குநர் பிரியதர்ஷன். படத்தை எடுத்ததும் திரையரங்குகளில் வெளியிடவில்லை. உலக திரைப்பட விழாக்கள் பலவற்றிற்கு அனுப்பிவைத்தார். திரைப்பட விழாவில் காஞ்சிவரத்தை பார்த்த திரைப்படக் கலைஞர்கள் பலரும் படத்திற்கு பெரிதும் பாராட்டு வழங்கினர். ஒரு வருடத்திற்கு மேலாக உலக திரைப்பட விழாக்களில் பவனிவந்த பின்புதான் தமிழ்நாட்டில் காஞ்சிவரம் வெளியானது. நல்ல படங்களுக்கு எத்தகைய வரவேற்பு!'' - (சினிமாச் செய்திகளிலிருந்து).
நெய்பவனுக்குத் துணியோ தறியோ, சொந்தமில்லை என்னும் கசப்பான உண்மையை எடுத்துச்சொன்ன சினிமா காஞ்சிவரம்.கதை நிகழும் காலகட்டம் போலிச்சுதந்திரத்துக்கு முந்தையது. பட்டு நெசவாளியான வேங்கடம்-பிரகாஷ்ராஜ்- தன் கல்யாணத்தின்போது தன் மனைவியை பட்டுப்புடவையில் அமர வைத்து தாலி கட்டுவேன் என தனக்குள் சபதம் ஏற்கிறார்.அது வறுமையின் காரணமாக இயலாமல் போக, தன் மகளை -தாமரை-மணவறையில் பட்டுப்புடவையில்தான் அமர வைப்பேன் என்று ஊர்அறிய சபதம் செய்கிறார்.இதை நிறைவேற்ற அவர் தறியில் பட்டுநூலை திருட நிர்ப்பந்திக்கப்படுகிறார். இதன் விளைவாக சட்டம் அவரைக் கைது செய்கிறது.கைது செய்யப்பட்டு சிறை சென்ற வேங்கடம் படுத்த படுக்கையாகக் கைகால் வழங்காமல் கிடக்கும் மகளைப் பார்க்க இரண்டு நாட்கள் அனுமதி பெற்று பொலிஸ் காவலில் ஊருக்கு
வருகிறார். பராமரிக்க ஆளின்றியிருக்கிற தன் அன்பு மகளைப்பார்க்கிறார்.வாழ வைக்க வழியோ வாய்ப்போ அற்ற அந்த ஏழைப் பட்டு நெசவாளி {எலிப் பாசாண) நஞ்சு கலந்த சோறையூட்டி மகளை அன்புடன் கொல்கிறார்.மரணச் சடங்கில், பதினாறு வருடங்களாக நெய்தும் முடிவுறாத சேலைத்துண்டை இரகசிய தறியில் இருந்து அரிவாளால் வெட்டிக்கொண்டு வந்து உடலைப் போர்த்துப் பார்க்கையில்: முகத்தை மூடினால் கால் மூடப்போதாது, காலை மூடினால் முகம் மூடப்போதாது என வெட்டுப்பட்டுக்கிறது அந்தச் சிவப்புப் பட்டுத்துணி.பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பாடுபடுகிறார் தந்தை வேங்கடம்.48 மணி நேரமாகிறது,போலீசார் சரி, வா போகலாம் என்று சொன்னதும் திரும்பி அவர்களைப்பார்த்து வேங்கடம் வெறுப்புச் சிரிப்பை உதிர்க்கிறார், தாமரை முழுதும் மூடாமல் உதிர்ந்து கிடக்கிறது;
காஞ்சிவரம் இதோடு முடிகிறது,
மன்மோகன் சோனியாகும்பலின் பாரத புரம் தொடர்கிறது.பாரத புரத்தில் காஞ்சிவரம் நிச்சயம் ஒரு கலைத்துறைப் பாதிப்பை நிகழ்த்தும்.நன்றி காஞ்சிவரம் கலைஞர்களுக்கு.
குறிப்பு: You Tube இணையத்தில் 13 தனித்தனிப் பாகங்களாக காஞ்சிவரத்தைக் காணமுடியும்

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...